/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1957.jpg)
actor Naga Chaitanya opens up about embracing parenthood with Samantha Akkineni - சமந்தா வீட்டில் விரைவில் மழலை சத்தம்! 'நேரம் வரும் விரைவில்' - நாக சைதன்யா
தமிழில் சூர்யா - ஜோதிகா ஜோடி பெரியளவில் திருஷ்டி சுற்றி போட வைத்தது போன்று, தெலுங்கில் சுற்றி போட வைத்திருப்பது நாக சைதன்யா - சமந்தா ஜோடி தான். சமந்தா தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும், தெலங்கானா மருமகளாகிவிட்டார். நாக சைதன்யா சென்னையில் படித்து வளர்ந்தவர். நன்றாக தமிழ் பேசக் கூடியவர் என்பதால், நம்ம ஊரு மாப்பிள்ளையாக எடுத்துக் கொள்ளலாம்.
தெலுங்கில் ரீல் லைஃபிலும், ரியல் லைஃபிலும் ஹாட் இந்த ஜோடி தான். அதனாலேயே எப்போது இருவரும் அப்பா, அம்மாவாகப் போகிறீர்கள் என்று ரசிகர்கள் நச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். குறிப்பாக, சமூக வாசிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்று சமீபத்தில் கொளுத்திப் போட, அதற்காகவே வெவ்வேறு விதமான தனது ஸ்டில்களை வெளியிட்டார் சமந்தா.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நாக சைதன்யா, "விரைவில் அதற்கான நேரம் வரப் போகிறது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சமந்தா ஒரு பேட்டியில், "எனக்கு எப்போது குழந்தை பிறக்க வேண்டும் என்ற தேதியை நான் முடிவு செய்துவிட்டேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.