Advertisment

நகைச்சுவை நாயகன் நாகேஷ் பிறந்தநாள் இன்று! மெய் சிலிர்க்க வைக்கும் திறமையின் தொகுப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actor Nagesh

Actor Nagesh

Actor Nagesh birthday : தமிழ் திரையுலகின் கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் காலம் வரை மனதை விட்டு நீங்காத நகைச்சுவை நாயகன் நாகேஷ் பிறந்தநாள் இன்று.

Advertisment

1933ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கிருஷ்ண ராவ் மற்றும் ருக்மணியம்மா தம்பதிக்கு பிறந்தார் நாகேஷ். அவர் பள்ளி பதிவுகளில் இவரின் பிறந்தநாளை பிப்ரவரி 8ம் தேதி என்று பதிவிட்டிருந்தாலும், மற்ற அதிகாரப்பூர்வ பதிவீட்டுகளில் 27ம் தேதி செம்டம்பர் மாதமே அவரின் பிறந்தநாள் என்று பதிவாகியுள்ளது.

Actor Nagesh birthday : நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்தநாள் :

குழப்பங்கள் எதுவாக இருப்பினும், நாகேஷ் என்ற மாபெரும் கலைஞனின் பிறந்தநாளை கொண்டாட ஒரு நாள் போதுமா? இன்றைய தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி இவர். இவரையே தனது ஆசானாக கொண்டவர்கள் பலர்.

துணை நடிகராக தனது பயணத்தை தொடங்கி பிற்காலத்தில், கதாநாயகனாக நடித்து பல வெற்றி படங்களை தந்திருக்கிறார். இவரின் பெரும்பாலான் படங்களில் துணை நடிகராகவே நடித்திருந்தாலும், அனைவரின் கவனமும் படத்தின் கதாநாயகனை விட இவர் பக்கமே இருந்தது.

பலரும் இவரை குருவாக எண்ணியிருந்தால், இவரோ ஹாலிவுட் படம் நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயிஸ்-க்கு சிஷ்யனாக இருக்கவே விரும்பினார். இவரின் நடிப்பு, உடல்மொழி, பாவம் அனைத்தும் ஜெர்ரியை போன்றே இருக்கும் என்பதால் இவரை பலரும், ‘இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்’ என்று அழைத்தனர்.

1974ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. பின்னர், தமிழக அரசு சார்பில், 1994ம் ஆண்டு நம்மவர் விருது பெற்றார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

இத்தகைய மேதையின் பிறந்தநாளில் மெய்சிலிர்க்க வைத்த அவரின் நடிப்பு காட்சிகளின் தொகுப்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உங்களுக்கு வழங்குகிறது:

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment