நான் மட்டுமல்ல பலரும் ஏமாந்துள்ளனர்... நீங்கள் இதை செய்ய வேண்டும் : பிலிப்கார்ட்டுக்கு யோசனை சொல்லும் நகுல்

நடிகர் நகுல் ஆர்டர் செய்ததில் போலி ஐபோன் கிடைத்துள்ளது. இதனை புகாராக பதிவு செய்த பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு நன்றி கூறி பிறருக்கும் உதவுமாறும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் நகுல் தனது திருமண நாளை முன்னிட்டு தனது மனைவியின் விலையுயர்ந்த ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ் மாடல் ஐபோனை பரிசளிக்க திட்டமிட்டு, ஃபிள்ப்கார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார்.

போலி ஐபோன் பணத்தை திரும்ப பெற்ற நடிகர் நகுல்

ஐபோன் பார்சல் வீட்டிற்கு வந்து சில நாட்கள் கழித்து பிரித்து பார்த்தபோது, அதில் பிளாஸ்டிக் போன் இருந்ததாகவும், ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் இருந்ததாகவும் அதிர்ச்சி தகவலை பகிர்ந்திருந்தார்.

சுமார் ரூ.1.25 லட்சத்திற்கு ஐபோன் ஆர்டர் செய்து ஏமாந்து போன நடிகர் நகுல், ஃபிளிப்கார்ட்டின் சேவை அதிகாரைகளை தொடர்புக் கொண்டும் எந்த பிரயோஜனமும் இல்லாததால், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவாக பகிர்ந்தார்.

இந்நிலையில், நகுலின் புகாரை ஏற்ற ஃபிளிப்கார்ட் நிறுவனம், நகுல் செலுத்திய ரூ.1.25 லட்சம் பணத்தை திருப்பி வழங்கியதாகவும், அதற்கு நன்றி என்றும் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தான் பகிர்ந்த ட்வீட்டில் தன்னை போல் பலரும் ஏமாந்ததாக கூறும்போது மனதிற்கு வருத்தமாக உள்ளது.

இந்திய நிறுவனமான ஃபிளிப்கார்ட் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல், வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவையை வழங்கி இந்தியாவில் நம்பர் ஒன் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமாக வர வேண்டும் என்றும் நகுல் கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close