/indian-express-tamil/media/media_files/2025/08/22/agent-11-vs-it-3-2025-08-22-22-07-03.jpg)
கடந்த மே மாதம் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஹிட் 3 படம் கதை திருட்டு தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள நிலையில், இநத வழக்கு கடந்து வந்த பாதை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரைலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. ரேடியோ ஜாக்கியாக இருந்து, சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள இவர், தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இதன் காரணமாக, நானி நடிக்கும் படங்கள் தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழகத்திலும் பெரிய வரவேற்பை பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது நானி நடித்துள்ள படம் ஹிட் தி தேர்டு கேஸ்.
கடந்த 2020-ம் ஆண் வைசாக் சென் நடிப்பில் வெளியான ஹிட் தி பர்ஸ்ட் கேஸ், 2022-ம் ஆணடு ஆத்வி சேஷ் நடிப்பில் வெளியான ஹிட் தி செகண்ட் கேஸ் ஆகிய படங்களை தனது வால்போஸ்டர் சினிமா நிறுவனத்தின் மூலம் தாயரித்திருந்த நானி, தற்போது, ஹிட் தி தேர்டு கேஸ் படத்தை தயாரித்து தானே ஹீரோவாக நடித்துள்ளார். கே.ஜி.எஃப், கோப்ரா ஆகிய படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரீநிதி இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சைலேஷ் கோலனு இயக்கியுள்ள இந்த படத்தில், அர்ஜூன் சர்கார் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் நானி. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கடந்த மே 1-ந் தேதி வெளியானது. ஏற்கனவே வெளியான ஹிட் மற்றும் ஹிட் 2 திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ஹிட் 3 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஹிட் 3 படம் மே 1-ந் தேதி வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. கூடவே இந்த படத்தின் கதை தொடர்பான சர்ச்சையும் எழுந்தது.
மே 1-ந் தேதி ஹிட் படம் வெளியான நிலையில், மே 9-ந் தேதி எஸ்.டபிள்யூஏன் என்ற நிறுவனம் படத்தின் கதை காப்பி தொடர்பாக புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பாகவும் படத்தின் கதை தொடர்பாக விளக்கம் கேட்டும், நடிகர் நானிக்க கடந்த மே 12-ந் தேதி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்பிறகு, மே 15-ந் தேதி ஹிட் படக்குழு மற்றும் இந்த படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனத்திற்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மே 20-ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நோட்டிஸை பெற்றுள்ளது.
PRESS NOTE
— Sonia Vimal (@NameisSoni) August 22, 2025
22nd Aug 2025
The writer of Agent 11 has filed a detailed 61-point rejoinder in the Chennai High Court in response to the HIT 3 team.#HIT3 Copyright Case – Short Recap :
· May 1, 2025: HIT 3 theatrical release
· May 9: Copyright complaint filed with SWAN
· May 12:… pic.twitter.com/2dTgjJClYs
ஜூன் 5-ந் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருந்த ஹிட் 3 திரைப்படம் மே 29-ந் தேதியே வெளியாவதாக மீடியாக்களில் செய்திகள் வெளியானது. ஜூன் 6-ந் தேதி முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 18-ந் தேதி தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஏஜெண்ட் 11 மற்றும் ஹிட் 3 ஆகிய இரு படங்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக அறிவித்தது. இந்த தகவலை சோனியா விமல் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.