தமிழ் சினிமாவில் 80களில் பிரபல நடிகராக இருந்தவர் நெப்போலியன். 70க்கும் மேற்பட்ட படங்களில் நெப்போலியன் நடித்துள்ளார். வில்லனாகவும், கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கு பிசினஸ் செய்து வருகிறார்.
இவரது மூத்த மகன் தனுஷ்-க்கும் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தனுஷ் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் தமிழகம் வரவில்லை. வீடியோ கால் மூலம் இவர்ளது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெல்போலியன், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தமிழகம் வந்து நிச்சயதார்த்த விழாவை சிறப்பாக நடத்தினர்.
இந்நிலையில், நெப்போலியன் வெளிநாட்டில் வசித்து வந்தாலும், தமிழ்நாட்டில் மருமகள் (தனது மகனுக்கு) பெண் பார்த்தது குறித்து நெகிழச்சியாக பேசியுள்ளார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பேசிய நெப்போலியன், நான் கடல் கடந்து வாழ்ந்தாலும் என்றும் தமிழை மறக்காதவன். தமிழ் கலாச்சாரத்தை நான் மறக்காதவன். என் மகன்களையும் தமிழ் கலாச்சாரத்தோடு தான் வளர்த்து வருகிறேன்.
நான் எந்த தேசத்தில் இருந்தாலும் என்னுடைய குடும்பத்தில் என் மருமகள் தமிழ்நாட்டு பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். எனக்கு பணம் காசு முக்கியம் கிடையாது. என்னுடைய மருமகள் என்னுடைய அடுத்த வாரிசு, அதனால் தான் நான் தமிழ்நாட்டு பொண்ணை என்னுடைய மருமகளாக எடுத்துள்ளோன் என்று அதில் பேசி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“