/tamil-ie/media/media_files/uploads/2018/12/viswasam.jpg)
Viswasam vs Tamilrockers: விஸ்வாசம் ரிலீஸ் பிரச்னை
விஸ்வாசம் படத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா இருவரும் பாரம்பரிய உடையில், டிராக்டரில் வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் – இயக்குநர் சிவாவின் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்க்கும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் வயதான அஜித்துக்கு ஜோடியாகா காலா ஈஸ்வரியும் இளைய அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
விஸ்வாசம் படம் ஃபோட்டோ
அதே நேரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட கலக்கி வருகிறது. சமூக வலைதளத்தை திறந்தாலே இரண்டு போஸ்டில் ஒன்று மரண மாஸ் பாடலை பற்றியதாகவும், ரஜினியை பற்றியதாகவும் இருக்கிறது. இதனால் பேட்ட படத்தோடு போட்டியில் இருக்கும் அஜித்தின் விஸ்வாசம் இனி அதிரடியை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தல அஜித்துடன், நயன்தாரா டிராக்டரில் செல்லும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
December 2018#ThookuDuraiWithNiranjana On Spot #Viswasam ???? pic.twitter.com/KzRXoi6UQs
— Nayanthara✨ (@NayantharaU)
#ThookuDuraiWithNiranjana On Spot #Viswasam ???? pic.twitter.com/KzRXoi6UQs
— Nayanthara✨ (@NayantharaU) December 7, 2018
இதில் அஜித் வேட்டி சட்டை அணிந்து டிராக்டரில் வயலை உலுகிறார். அந்த டிராக்டரில் கிராமத்து கண்டாங்கி சேலை கட்டி நயன்தாரா சிரித்தபடி காணப்படுகிறார். இந்த புகைப்படம் இன்று நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.