சென்னை கொளத்தூரில் மு.க. ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் நடிகர் பார்த்திபன் கலந்துகொண்டார்.
அப்போது அவர், புகைப்பட கண்காட்சிக்கு போயிருந்தேன். அப்போது எனக்கு தோன்றியது, மாபெரும் கலைஞர் ஒருவரின் மகன் எவ்வளவு சிரத்தைகளை அனுபவித்துள்ளார் என்று எண்ண தோன்றுகிறது.
முதல்வரின் பொறுமை கடலை விட பெரியது. அந்தப் பொறுமையால்தான் அவருக்கு இந்தப் பதவி கிடைத்துள்ளது. இது வாரிசு அரசியலும் கிடையாது.
அவருக்கான தகுதியை இந்தனை நாள்களாக வளர்த்துக் கொண்டு இந்தப் பதவியை அடைந்துள்ளார். இதுவே என் தாழ்மையான கருத்து என்றார்.
நடிகர் பார்த்திபனுக்கு முன்னர் பேசிய நித்யஸ்ரீ, “குழந்தைகளுக்கு பாரம்பரிய இசையை கற்றுக் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் கவனச் சிதறல்களை தடுக்கும்” என்றார்.
இந்த விழாவில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“