வந்தே பாரத் ரயிலில் உணவு மோசம் என நடிகர் பார்த்திபன் புகார் தெரிவித்திருந்த நிலையில், விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே நிர்வாகம், மோசமான உணவை விநியோகம் செய்த சேலம் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்துள்ளது.
பிரபல நடிகர், இயக்குநர் பார்த்திபன் அக்டோபர் 13-ம் தேதி வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தார். அப்போது வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட 'உணவு மற்றும் சிக்கன் மோசமாக இருந்தது' என கூறி இருந்தார். நடிகர் பார்த்திபன் புகார் குறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
விசாரணையில், தரமில்லாத மோசமாக உணவு வழங்கப்பட்டது உறுதியான நிலையில், இந்த உணவை வழங்கியது சேலத்தைச் சேர்ந்த உணவு ஒப்பந்ததாரர் என தெரிந்ததும் சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்தனர்.
மேலும், இனிமேல் உணவு மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் எனவும் ஒப்பந்ததாரருக்கு சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் எச்சரித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“