/tamil-ie/media/media_files/uploads/2022/01/Untitled-32.jpg)
Actor parthiban wishes her daughter on her birthday
தமிழ் நடிகர் பார்த்திபன், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவர்.
பார்த்திபன் தயாரித்து, நடித்து , இயக்கிய ஒத்த செருப்பு படம் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் இது சூப்பர் ஜூரி விருதுக்கான தேசிய விருதைப் பெற்றது. இப்போது, இரவின் நிழல் என்கிற புதிய படத்தை பார்த்திபன் இயக்குகிறார். இது ஆசியாவின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம். மேலும், உலகில் இதுவரை யாரும் செய்யாத ஒரு முயற்சி.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று பார்த்திபன் முன்பே அறிவித்திருந்தார். அத்துடன், பார்த்திபனும் படத்தில், ஒரு பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் ‘இரவின் நிழல்’ படப்பிடிப்பு தளத்தில் வைத்து தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
சில இடைவேளைக்கு பிறகு படக்குழு இப்போது வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்துள்ளது.
மேலும் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிய படம் ‘யுத்த சதம்’ இந்த மாதம் ஜனவரி 26ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தை எழில் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் பார்த்திபன், தனது மகள் கீர்த்தனாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்ஸ்டாவில், கவிதையுடன் கூடிய அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சிறுமியாக நடித்த கீர்த்தனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது. கீர்த்தனா இப்போது உதவி இயக்குநராக இருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு, கீர்த்தனாவுக்கும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்ஷய்க்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.