scorecardresearch

நடிகர் பிரபுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. இதுதான் காரணம்.. மருத்துவமனை அறிக்கை

நடிகர் பிரபு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் பிரபுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. இதுதான் காரணம்.. மருத்துவமனை அறிக்கை

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன். 1980களில் பிரபு முன்னணி நடிகராக வலம் வந்தார். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அப்படியே நடிக்க கூடியவர். இயல்பான நடிப்பால் மக்களின் மனங்களை வென்றவர். தற்போது அஜித், விஜய், விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டோரின் படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் பிரபு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் நடிகர் பிரபு நேற்று முன்தினம் (பிப்ரவரி 20) இரவு சிறுநீரகப் பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, நேற்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.

அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய – பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor prabhu admitted to hospital undergoes surgery for kidney stones