பிரபு தேவா மூலம் உங்களை காண வருகிறார் சந்திர பாபு

பிரபல பழம்பெரும் நடிகர் சந்திர பாபு வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் சந்திர பாபுவின் கதாபாத்திரத்தில் நடிகரி பிரபு தேவா நடிக்க இருக்கிறார். நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் திரு.பிரபுதேவா அவர்கள் நடிப்பில் சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. இந்த நேரத்தில் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படங்களை பற்றி பல வதந்திகள் வந்துகொண்டும்தான் இருக்கிறது, பிரபல தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் திரு.ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மாஸ்டர் பிரபுதேவா அவர்கள் […]

chandra babu biopic, பிரபு தேவா
chandra babu biopic, பிரபு தேவா
பிரபல பழம்பெரும் நடிகர் சந்திர பாபு வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் சந்திர பாபுவின் கதாபாத்திரத்தில் நடிகரி பிரபு தேவா நடிக்க இருக்கிறார்.

நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் திரு.பிரபுதேவா அவர்கள் நடிப்பில் சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. இந்த நேரத்தில் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படங்களை பற்றி பல வதந்திகள் வந்துகொண்டும்தான் இருக்கிறது, பிரபல தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் திரு.ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மாஸ்டர் பிரபுதேவா அவர்கள் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

சந்திர பாபு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் பிரபு தேவா

மேலும் தமிழ் சினிமாவின் இதுவரை யாராலும் மறக்க முடியாத தனித்தன்மை வாய்ந்த காமெடி நடிகர் திரு.சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க இருப்பதாகவும் அதில் பிரபுதேவா சந்திரபாபுவாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இயக்குனர்கள் திரு.கே.ராஜேஷ்வர் மற்றும் ருரோ ஆகிய இருவரும் இனைந்து இந்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இருவரும் சமீபத்தில் மாஸ்டரை சந்தித்து திரைக்கதை புஸ்தகத்தை படிக்க கொடுத்திருப்பதாகவும்.

விரைவில் பிரபு தேவாவிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறுகின்றனர். பிரபு தேவாவின் ஆரம்பகால நடிப்பு, காமெடி எல்லாம் சந்திரபாபு போலவே இருந்ததால் இத கதையில் பிரபுதேவா நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்தோம் என்று இயக்குனர்கள் கூறியுள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor prabhu deva to act in chandra babu biopic

Exit mobile version