scorecardresearch

நீங்க ஒல்லியானாலும் அழகுதான்… வரலாற்றுப் படத்துக்காக 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரபு!

நடிகர் பிரபு அவருடைய குண்டான தோற்றத்திற்காக ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றவர். குண்டான தோற்றம் அவருக்கு அழகாக இருந்தது. ஆனால், தற்போது ஒல்லியாகி ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார்.

actor prabhu weight lose lot of kilos, actor prabhu, actor prabhu weight lose for ponniyin selvan movie, பிரபு, பொன்னியின் செல்வன், மணிரத்னம், 20 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்த நடிகர் பிரபு, நடிகர் பிரபு, director manirathnam, PS - I, prabhu, prabhu weight lose, manirathnam, tamil cinema, tamil cinema news, ponniyin selvan movie

தமிழ் சினிமா உலகில் 80களின் இறுதி முதல் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரபு அவருடைய குண்டான தோற்றத்திற்காக ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றார். பிரபுவின் குண்டான தோற்றம் அவருக்கு அழகாக இருந்தது. ஆனால், தற்போது ஒல்லியாகி இருக்கிறார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நடிகர் பிரபுவின் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனால், அவருடைய ரசிகர்களுக்கு கவலையாக இருந்தது. ஆனால், தற்போது, அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் ஆச்சரியப்படும் விதமாக, நடிகர் பிரபு 20 கிலோவுகு மேல் உடல் எடையைக் குறைத்துள்ளார். பிரபு திடீரென இப்படி, உடல் எடையைக் குறைப்பதற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிற நிலையில், அவர் உடல் எடையை குறைத்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபு இதற்கு முன்பு, மணிரத்னம் இயக்கத்தில், ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’ மற்றும் ‘ராவணன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் 4வது படமாக பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம், வரலாற்றுப் புனைவு படம் என்பதால் நீண்ட காலமாக தனது எடையைக் குறைக்க நினைத்த பிரபு, பொன்னியின் செல்வன் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மெல்லிய தோற்றத்தை வெளிப்படுத்த கடினமாக உழைத்து 20 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

நடிகர் பிரபு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக சில வழக்கமான உடற்பயிற்சிகளுடன் சில இயற்கை உணவு முறைகளையும் பின்பற்றினார். 64 வயதான நடிகர் பிரபு உடல் எடையைக் குறைத்து மிகவும் இளமையாக தோற்றமளிப்பதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நடிகர் பிரபு, ‘விஷால் 32’ படத்திற்காக 14 வருடங்களுக்குப் பிறகு விஷாலுடன் மீண்டும் இணைந்துள்ளார். விஷால் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷால் – பிரபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 27ம் தேதி தொடங்கியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor prabhu weight lose more than 20kgs for historical movie fans happy