scorecardresearch

அக்ஷைய் குமார் – பிரகாஷ்ராஜ் மோதல் : பாலிவுட் நடிகையின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவத்துடன் மோதி வீரமரணமடைந்ததை நடிகை ரிச்சா அவமதித்துள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

அக்ஷைய் குமார் – பிரகாஷ்ராஜ் மோதல் : பாலிவுட் நடிகையின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை

பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீர் குறித்து இந்திய ராணுவ வீரரின் ட்விட்டை பகிர்ந்து நடிகை ரிச்சா சதா பதிவிட்டிருந்த கருத்து தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், அக்ஷைகுமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் வட பிராந்திய ராணுவ கமாண்டர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். பாகிஸ்தான் போர் ஒப்பந்தத்தை மீறினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றர்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிககையாக ரிச்சா சதா இந்த பதிவை பகிர்ந்து, கல்வான் ஹாய் சொல்கிறது என்று பதிவிட்டிருந்தார். நடிகையின் இந்த ட்விட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவத்துடன் மோதி வீரமரணமடைந்ததை நடிகை ரிச்சா அவமதித்துள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த பதிவில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல என்றும் கூறியுள்ள நடிகை ரிச்சா யாரேனும் புண்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் ரிச்சா சதாவின் இந்த பதிவு திரைத்துறையில் அக்ஷய்குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது. ரிச்சாவின் கருத்துக்கு பதில் அளித்துள்ள நடிகர் அக்ஷைகுமார், நமது ஆயுதப்படை வீரர்களை விமர்சிப்பது வேதனையாக உள்ளது. அவர்களால் தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். என்று கூறியிருந்தார்.

அக்ஷைகுமாரின் இந்த பதிவு வைரலாக பரவிய நிலையில், ரிச்சாவின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து இந்தி பட இயக்குனர் அசோக் பண்டிட் ஜூஹூ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே அக்ஷைய் குமார் பதிவுக்கு ரிப்ளே செய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், உங்களிடம் இருந்து இந்த மாதிரியான பதிலை எதிர்பார்க்கவில்லை. உங்களை விட அந்த நடிகை சொன்னது நாட்டுக்கு பொருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

பிரகாஷ் ராஜூன் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது ட்விட்டர் பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor prakash and akshay kumar clash on twitter for actress post about indian army