/indian-express-tamil/media/media_files/TmsoLNgPoSVrvleJv4aW.jpg)
நடிகர் பிரசாத்துக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.1000 அபராதம் விதித்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இன்றைய அஜித் குமார், விஜய் போல் பெரிய நடிகராக வருவார் என இவரை பலரும் பாராட்டினார்கள்.
ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. பின்னாள்களில் பிரசாந்த் நடிப்பில் கவனம் சிதறிப் போனது. குடும்ப வாழ்க்கை பிரச்னையில் வேறு சிக்கித் தவித்தார்.
இந்நிலையில், நீண்ட இளைவெளிக்கு பின்னர் இவரின் நடிப்பில் வெளியான வின்னர் ஓரளவுக்கு கைகொடுத்தது. இந்தப் படத்தில் வடிவேல் காமெடிகள் பெரிதும் பேசப்பட்டன. இதற்கிடையில் இவரின் நீண்ட நாளாக வெளிவராமல் இருக்கும் அந்தகன் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது.
தற்போது, பிரசாந்த் நடிகர் விஜய் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த்துக்கு கனமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமான காட்சிகள் உள்ளன என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துவிட்டு புல்லட்டில் புறப்பட்டு சென்றார். ஆனால் ஹெல்மெட் அணியவில்லை. மேலும் அந்தப் புல்லட்டில் பின்னால் அமர்ந்து இருந்தவரும் ஹெல்மெட் அணியவில்லை.
#ActionTaken on reported violation.#GreaterChennaiTraffichttps://t.co/bAZecvNYgnpic.twitter.com/TqJVoLi9MT
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 1, 2024
இதையடுத்து டிராபிக் போலீசார் இருவருக்கும் சேர்த்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இவரின் புகைப்படத்தையும் பகிர்ந்து போக்குவரத்து விதிகளை கடைப்பிடியுங்கள்- உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.