தமிழக சட்டசபை தேர்தலில் தான் வாக்களிக்காதது ஏன் என்பது குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் காலையிலேயே வாக்களித்து விட்டு சென்றனர். ஆனால் நடிகர் பார்த்திபன் நேற்று வாக்களிக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் ட்வீட் செய்திருந்தார். ஆனால் அவரே வாக்களிக்க வரவில்லை.இதனால் சமூக வலைதளத்தில் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் தான் ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும்,இயலாமையும்.
இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட தனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது .முன்னரே அலர்ஜி பிரச்னைகள் இருந்ததால் இவ்வாறு ஏற்பட்டிருக்கிறது என அவர் ட்விட் செய்துள்ளார்.இருப்பினும், கொரோனா தடுப்பூசி அவசியம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்று ஏற்படும். அதுவும் எனக்கு ஏற்கனவே அலர்ஜி இருந்ததால் மட்டுமே இப்படிஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்…என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“