2 மாதங்கள் பாலைவனத்தில் தவித்த ப்ரித்விக்கு கொரோனா டெஸ்ட்; முடிவு என்ன தெரியுமா?

ஜோர்டான் நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் ஆடுஜீவிதம் திரைப்பட குழுவினரும் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டனர்.

ஜோர்டான் நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் ஆடுஜீவிதம் திரைப்பட குழுவினரும் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actor Prithviraj Sukumaran tests negative for covid19 novel coronavirus

Actor Prithviraj Sukumaran tests negative for covid19 novel coronavirus

Actor Prithviraj Sukumaran tests negative for covid19 novel coronavirus : ஆடுஜீவிதம் என்ற மலையாள நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் தான் ஆடுஜீவிதம். மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இந்த படத்தில் நடிக்க, பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் காட்சிகளை படம் பிடிப்பதற்காக ஜோர்டான் சென்ற படக்குழு, வாடி ரம் என்ற பாலைவனத்தில் காட்சிகளை படமாக்க துவங்கினார்கள். ஆனால் அதற்குள் கொரோனா உலகமெங்கும் பரவி, பெருநோயாக அறிவிக்கப்பட்டது. மக்களின் உயிரை காக்க உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

Advertisment

மேலும் படிக்க : இசைப்பிரியர்களுக்காக இசை OTT தளம் – இளையராஜாவின் புது முயற்சி

ஜோர்டான் நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் ஆடுஜீவிதம் திரைப்பட குழுவினரும் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் கடந்த மே 22ம் தேதி, இப்படக்குழுவினர் அனைவரும் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். கொச்சியில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் ப்ரித்விராஜுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.

Advertisment
Advertisements

அந்த சோதனை முடிவினை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை ரசிகர்களுக்கு உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனாலும் இரண்டு வாரங்களுக்கு சுயதனிமைப்படுத்துதல் அவசியம் என்ற காரணத்தால் மேலும் சில நாட்களுக்கு அவர் அதே ஹோட்டலில் தங்க உள்ளார். பின்னர் தான் அவர் தன்னுடைய வீட்டிற்கு திரும்பிச் செல்லப் போகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: