அந்த சாமியாரை கும்பிட்டு வந்தவங்களாம் சொல்றாங்க கெடுத்தது பற்றி : ராதாரவி சர்ச்சை பேச்சு

நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் மி டூ விவகாரத்தில் சின்மயி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடி ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஸ்டேகில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

மி டூ விவகாரம் குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு :

பாடகி சின்மயி, வைரமுத்துவிடம் மற்றும் நின்று விடாமல் பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாக கூறி பல்வேறு பிரபலங்களின் பெயரை கூறி வருகிறார். அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் ராதா ரவியும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்று ட்விட்டரில் குற்றச்சாட்டை முன்வைத்தார் சின்மயி.

இந்நிலையில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ராதாரவி இது குறித்து பேசிய போது , “போகிற போக்கில் யாரோ என் பெயரையும் சொல்லிட்டு போயாச்சு. நாங்க வில்லன் குடும்பம் வேற. இப்படி சொன்னா உடனே நம்பிடுவாங்க வேற. அனால் அது பற்றி எனக்கு கவலை இல்லை. சாமியார் எல்லாம் கெடுக்கிறான் அது பற்றி பேச மாட்டேங்கிறாங்க. அந்த சாமியார் கிட்ட போயி கும்பிட்டு வந்தவங்களாம் சொல்றாங்க இவன் கெடுத்துட்டான் அவன் கெடுத்துட்டான். நீ போனியே அந்த சாமியார் கெடுத்தாரா அத முதலில் சொல்லு.” என்று பேசியுள்ளார்.

மேலும், சின்மயி தன் வைத்துள்ள குற்றச்சாட்டு போலியானது என்றும் நான் தவறு செய்தால் என் மீது வழக்கு போடுங்கள், நான் தயார். இவ்வாறு பேசி உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் பேசியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close