Advertisment
Presenting Partner
Desktop GIF

நவம்பரில் ரஜினி கட்சி? இணைவதாக ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவருடைய லட்சக் கணக்கான ரசிகர்களில் ஒருவனாக இருந்து எந்த எதிர்பார்ப்பும் இன்றி சமூதாயத்துக்காக எனது சிறந்த சேவையை செய்வேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
actor raghava lawrence rajinikanth, ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ்,

ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ்,

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவருடைய லட்சக் கணக்கான ரசிகர்களில் ஒருவனாக இருந்து எந்த எதிர்பார்ப்பும் இன்றி சமூதாயத்துக்காக எனது சிறந்த சேவையை செய்வேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ரஜினி விருப்பப்பட்டால் பாஜக ரஜினியுடன் கூட்டணி அமைக்கும் என்று பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவருடைய லட்சக் கணக்கான ரசிகர்களில் ஒருவனாக இருந்து எந்த எதிர்பார்ப்பும் இன்றி சமூதாயத்துக்காக எனது சிறந்த சேவையை செய்வேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நண்பர்களே, ரசிகர்களே, நான் இன்று சில முக்கியமான விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த மாதம், நான் அரசியலில் நுழையாமல் நாம் சேவை செய்ய முடியும் என்று பதிவிட்டிருந்தேன். அதற்கான காரணம் என்னுடய அறிக்கையில் உள்ளது. நான் பல சமூக சேவைகளை செய்து வருகிறேன். என்னுடைய நண்பர்களும் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் பல அரசியல்வாதிகளும் என்னை கேட்பது உண்டு, இதையெல்லாம் நீங்கள் அரசியலில் நுழைவதற்காக செய்கிறீர்களா என்று கேட்பார்கள். சிலர் நீங்கள் அரசியலுக்குள் வந்தால் இதைவிட அதிகமாக சேவை செய்யலாம் என்று அறிவுரை கூறினார்கள். முக்கியமாக கொரோனா தொற்று நெருக்கடியில் சேவை செய்ததற்குப் பிறகு, அந்த அழுத்தம் அதிகரித்துள்ளது. எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன். நான் ஒரு சாதாரண மனிதன். நான் குழந்தைகளுக்கான ஒரு இல்லத்தை எனது சொந்த வீட்டில் தொடங்கி எனது சேவையை தொடங்கினேன். நான் எப்போதுமே உதவி தேவை என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஒவ்வொருவரும் எனக்காக நல் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கலைஞர், ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் போல பலர் இதயநோய் அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்திருக்கிறார்கள். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோர் எனக்கு பல்வேறு சேவைகளுக்காக உதவி செய்திருக்கிறார்கள். நான் தனிமனிதனாக செய்வதைவிட அரசியலில் நுழைந்தால் இன்னும் பல சேவைகளை செய்ய முடியும் என்பதை நன்றாக அறிவேன். ஆனால், நான் ஏன் அரசியலில் நுழையக்கூடாது என்பதற்கான காரணம், என்னுடைய அம்மா அதே கருத்தை சொல்லியிருகிறார். நான் எதிர்மறையான அரசியலை விரும்பவில்லை. மற்றவர்களைப் பற்றி நாம் தவறாக பேச வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நான் அனைவரையும் மதிக்கிறேன். அதனால், யாராவது எதிர்மறை அரசியல் இல்லாமல் ஒரு கட்சியைத் தொடங்கினால், நாம் தவறாக பேச வேண்டிய அவசியம் ஏற்படாது. அல்லது மற்றவர்களை காயப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. அதன்பிறகு, அவர்களுடன் இருந்து பொதுமக்களுக்கு எனது பங்கு சேவையை செய்வேன். இந்தியாவில் அத்தகை ஒரு கட்சி நேர்மையான அணுகுமுறையுடன் என்னுடைய குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் சாத்தியப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். காரணம் அவர் யாரையும் காயப்படுத்தாதவர். அரசியலுக்காகக்கூட அவர் காயப்படுத்தமாட்டார். அதனால், அவர் கட்சி தொடங்கினால், அவர் யாரையும் எப்போதும் காயப்படுத்தமாட்டார். தலைவர் ஆன்மீக அரசியலைத் தொடங்கிய பிறகு, அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக இருந்து சமுதாயத்துக்காக நான் என்னுடைய சிறந்த சேவையை அவருடன் இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வேன். சேவையே கடவுள்.” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Rajinikanth Raghava Lawrence
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment