Advertisment

'ஒன் சைட் லவ்' ராகவேந்திரன் புலி தற்கொலை முயற்சியா? புதிய வீடியோ

ஒரு ஒன் சைடு லவ் மொத்த பாடியும் க்ளோஸ், கடுமையான மன அழுத்தம் நல்லா இருமா என்ன கொடுமைடா

author-image
WebDesk
New Update
'ஒன் சைட் லவ்' ராகவேந்திரன் புலி தற்கொலை முயற்சியா? புதிய வீடியோ

பிரபல சின்னத்திரை நடிகர் ராகவேந்திரன் புலி கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் உள்ளதாக தகவல வெளியான நிலையில், தற்போது இது குறித்து அவரே வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகனமானவர் ராகவேந்திரன். அந்த சீரியலில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், தொடர்ந்து காற்றுக்கொன்ன வேலி தொடரில் நடித்தார். ஆனால் இந்த தொடரில் சம்பள பிரச்சினை மற்றும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி அதில் இருந்து விலகினார்.

மேலும் இனி சின்னத்திரையில் நடிப்பதில்லை என்று கூறிய அவர், சினிமா தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தற்போது தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருவதாகவும், சமீபத்தியு யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஏமாற்றங்களுக்கு பிறகு தான் மிகவும் மன உலைச்சலில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராகவேந்திரன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், ஒரு ஒன் சைடு லவ் மொத்த பாடியும் க்ளோஸ், கடுமையான மன அழுத்தம் நல்லா இருமா என்ன கொடுமைடா என்று பதிவிட்டு கூடவே ட்ரிப்ஸ் ஏறும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவர் ஒரு தலை காதல் தோல்வி காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது இதை மறுத்துள்ள ராகவேந்திரன் இது குறித்து விளக்கம் அளித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தலை காதல் என்று பதிவிட்டி வீடியோ ஜாலியாக வெளியிட்ட ஒன்று. அதை பார்த்து நான் தற்கொலை முயற்சி செய்து ஹாஸ்பிட்டலில் இருப்பது போன்று செய்திகள் வெளியானது. இதை பார்த்த நான் ஷாக் ஆகிவிட்டேன் . என் குடும்பத்தில் உள்ளவர்கள் இந்த மாதிரியான செய்திகளை பார்த்து நொந்துபோய்விட்டார்கள்.

நான் ஏன் தற்கொலை முயற்சி செய்ய வேண்டும். அதுவும் இது போன்ற விஷயத்திற்காக நிச்சயமாக கிடையாது. இது வதந்தி மட்டுமே யாரும் நம்ப வேண்டாம். நான் டிப்ரஷனில் இருப்பது உண்மை. அதற்காக தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை. இது போன்று தவறாக தகவல்களை பரப்பாதீர்கள். இது பலருக்கும் தவறான உதாரணமாக மாறிவிடும் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment