ஹோட்டல் ஓனர் பையன், படிப்பு ஏறல; வீட்டுக்கு தெரியாம இதை செய்தேன்: ரகுவரன் வாழ்க்கையில் சினிமா வந்த தருணம்!

நடிகர் ரகுவரன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமாவில் சேர்வதற்காக சில தியாகங்களையும் செய்ய வேண்டியதாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரகுவரன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமாவில் சேர்வதற்காக சில தியாகங்களையும் செய்ய வேண்டியதாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Actor Raghuvaran

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நடிகர் ரகுவரன் பழைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தென்னிந்திய திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த ஒரு கலைஞராக ரகுவரன் திகழ்ந்தார். 200-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த இவர், தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் குரலால் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருந்தார்.

சென்னை எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடிப்பில் டிப்ளோமா படித்த ரகுவரன், ஹரிஹரன் இயக்கிய 'ஏழாவது மனிதன்' என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அந்தப் படம் பல விருதுகளை வென்றாலும், அவருக்கு அதிகம் பட வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை. 'ஒரு ஓடை நதியாகிறது', 'நீ தொடும்போது' போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், அவை வெற்றியடையவில்லை.

ஆனால், 'சில்க் சில்க் சில்க்' படத்தில் ரகுவரன் ஏற்ற வில்லன் கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வெற்றி, அவருக்கு பல வாய்ப்புகளின் கதவுகளை திறந்தது. 'குற்றவாளிகள்', 'மந்திரப் புன்னகை', 'பூவிழி வாசலிலே', 'மக்கள் என் பக்கம்', 'புரியாத புதிர்' போன்ற படங்களில் தொடர்ந்து கலக்கினார். அதிலும், 'புரியாத புதிர்' படத்தில் இடம்பெற்ற இவரது 'I know' வசனத்தை ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

Advertisment
Advertisements

இது தவிர, ரஜினிகாந்த் மற்றும் ரகுவரன் கூட்டணியில் உருவான பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அந்த வகையில், 'மிஸ்டர். பாரத்' , 'ஊர்காவலன்', 'மனிதன்', 'சிவா', 'ராஜா சின்ன ரோஜா' , 'பாட்ஷா', 'முத்து', 'அருணாச்சலம்' மற்றும் 'சிவாஜி' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இந்நிலையில், பழைய நேர்காணல் ஒன்றில், தன்னை பற்றி நடிகர் ரகுவரன் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில், "என் தந்தை கோவையில் உணவகம் நடத்தி வந்தார். நான் அதிகமாக மற்றவர்களிடம் பேசுவது கிடையாது. அதிலும், படப்பிடிப்பு தளங்களில் பெரும்பாலும் பேச மாட்டேன். அந்த கதாபாத்திரம் குறித்து மட்டுமே யோசித்துக் கொண்டிருப்பேன்.

அதனால், தனிப்பட்ட முறையில் நான் வித்தியாசமான நபர் என்று பலரும் கருதினர். என் வாழ்க்கை முழுவதும் பல கனவுகளுடன் வாழ்ந்தேன். நான் படித்து பெரிய நிலைக்கு வரவேண்டும் என்று, என்னை கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், படிப்பில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. 

வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்வதற்காக விண்ணப்பித்தேன். இதற்காக பல தியாகங்களையும் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், உழைப்பு வீண் போகாது என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஒரு விஷயத்தை உறுதியாக நினைத்து அதற்கான முயற்சிகள் செய்தால், நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நான் நம்பினேன்" என நடிகர் ரகுவரன் தெரிவித்துள்ளார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: