தமிழ் தொலைக்காட்சிகளில் நந்தினி, சாக்லேட், கண்ணான கண்ணே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ராகுல் ரவிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவர் தனது வருங்கால மனைவியின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.
நந்தினி, சாக்லேட், 'கண்ணான கண்ணே' உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சிரியல் பார்வையாளர்களிடம் பிரபலமானவர் நடிகர் ராகுல் ரவி. அவர் தனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பொது முடக்க காலம் பலரின் தொழில் வாய்ப்புகளை முடக்கி இருக்கலாம். ஆனால், இந்த கால கட்டத்தில்தான் பிரபலங்களின் தனிப்பட்ட இல்லற வாழ்க்கை தொடங்கியிருக்கிறது.
அந்த வரிசையில், சன் டிவில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய நந்தினி சீரியலில் ஹீரோவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த ராகுல் ரவிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த சீரியலில் கிடைத்த வரவேற்புக்கு பிறகு, ராகுல் ரவி, கண்ணான கண்ணே, சாக்லேட் போன்ற சீரியல்களில் நடித்தார்.
இந்த நிலையில், நடிகர் ராகுல் ரவி தனது வருங்கால மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவரைப் பற்றி எழுதியுள்ளார். ராகுல் ரவி தனது வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு குறிப்பிட்டிருப்பதாவது, “நான் அவளை முதன்முதலில் சந்தித்த போது இதுவும் ஒரு சாதாரண நாள் தான் என்று நினைத்தேன். பின்பு ஒவ்வொரு நாளும் அவளால் மெருகேறிக் கொண்டே வந்தது. இன்று எனக்கு ஸ்பெஷலான பெண்ணாக மாறியுள்ளார். எனது நாட்கள் மட்டுமல்ல எனது வாழ்க்கையும் அவளால் சிறப்பானதாக மாறியுள்ளது. அவரது அழகான புன்னகையையும் பேச்சுக்களையும் பார்க்கும்போது அவள் என் வாழ்க்கையில் ஒரு சாதாரண பெண்ணல்ல, இவள்தான் என் வாழ்க்கை என்று அறிந்துகொண்டேன். நன்றி லக்ஷ்மி நாயர். அந்த மிகப்பெரிய நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ராகுல் ரவியின் வருங்கால மனைவி லக்ஷ்மி நாயர் என்று தெரியவந்துள்ளது. ராகுல் ரவிக்கு விரைவில் லக்ஷ்மி நாயர் உடன் திருமணம் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil