எனக்கும் முடி இருந்தது, கர்லிங் ஹேர் தான்; ஷூட்டிங்கில் நடந்த இந்த சம்பவத்தால் போச்சு; மொட்டை ராஜேந்திரன் உருக்கம்!
தனக்கு எவ்வாறு முடி கொட்டியது என நடிகர் மொட்டை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஒரு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சம்வத்தின் காரணமாக முடி கொட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு எவ்வாறு முடி கொட்டியது என நடிகர் மொட்டை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஒரு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சம்வத்தின் காரணமாக முடி கொட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ராஜேந்திரன், தனக்கு முடி கொட்டிய சம்பவத்தை உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார். பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு நேர்காணலின் போது இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ராஜேந்திரன் என்று கூறுவதை விட மொட்டை ராஜேந்திரன் என்று கூறினால் எளிதாக புரிந்துவிடும். பாலா இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார்.
ஆனால், அதற்கு முன்பு ஏராளமான படங்களில் சண்டை பயிற்சியாளராக மொட்டை ராஜேந்திரன் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர், இவர் நடித்த நான் கடவுள் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதன் பின்னர், தொடர்ச்சியாக பல படங்களில் வில்லனாக நடித்தார்.
பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் இவர் நடித்த காமெடி கதாபாத்திரத்திரமும் பார்வையாளர்களை கவர்ந்தது. அதன்படி, ராஜா ராணி, தில்லுக்கு துட்டு போன்ற பல படங்களில் சந்தானத்துடன் சேர்ந்து காமெடி வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனக்கு எவ்வாறு முடி கொட்டியது என ஒரு நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
அதில், "இதற்கு முன்பாக எனக்கு நிறைய கர்லிங் ஹேர் இருந்தது. ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம், வயநாட்டிற்கு சென்றேன். அப்போது, சுமார் 10 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பதை போன்ற காட்சியை படமாக்கினார்கள்.
நானும் அவர்கள் கூறியது போல தண்ணீரில் விழுந்தேன். அதன் பின்னர் தான், நான் விழுந்தது தொழிற்சாலையில் இருந்து வெளியான கழிவுநீர் என தெரிந்தது. இதனை அந்த ஊர் மக்கள் என்னிடம் கூறினார்கள்.
மற்ற ஆர்டிஸ்ட்களுக்கு தான் உடனடியாக சென்று குளிக்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கும். எங்களுக்கு அந்த வசதி இல்லை. இதனால், அப்படியே வீட்டிற்கு வந்து விட்டேன். அதன் பாதிப்பின் காரணமாக முடி முழுவதும் உதிர்ந்து விட்டது. இப்போது, மொட்டை ராஜேந்திரன் என்ற பெயருடன் இருக்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.