திடீர் உடல் நலக் குறைவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்.30) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். சீரற்ற ரத்த ஓட்டம், செரிமான பிரச்சினை காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
பின்னர் அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதன்பின் 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான அதிநவீன ஆஞ்சியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
தொடர்ந்து கார்டியாக் பிரிவு அறையில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து கண்விழித்த பின் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து கார்டியாக் பிரிவு அறையில் இருந்து ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் மருத்துவமனை தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிட வில்லை. ரஜினி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
73 வயதான ரஜினி, ஞானவேல் இயக்கத்தில் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் அக்,10-ம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி விரைவில் நலம் பெற வேண்டி ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் முதல் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில், “திரு. ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
"திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்." - ஆளுநர் ரவி
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 1, 2024
தொடர்ந்து, ரஜினி விரைவில் நலம் பெற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கதில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 1, 2024
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்" என்று கூறி பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் முழு உடல்நலம் பெற்று, மீண்டுவர என்னுடைய பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன் என்று நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், மதிப்புக்குரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
உலக அளவில் பொதுமக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் திரு. ரஜினிகாந்த் அவர்கள், விரைந்து நலம் பெற்று, தனது கலைப் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மதிப்புக்குரிய சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
— K.Annamalai (@annamalai_k) October 1, 2024
உலக அளவில் பொதுமக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் திரு @rajinikanth அவர்கள், விரைந்து நலம் பெற்று, தனது கலைப் பணிகள் தொடர,…
ஆங்கிலத்தில் படிக்க: Rajinikanth hospitalised in Chennai for planned procedure
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.