தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விடுதலை பாகம்- 1’ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதைப்பற்றி நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “விடுதலை… இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்!
சூரியின் நடிப்பு – பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்”, என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil