Advertisment

சௌந்தர்யா- விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை : மீண்டும் தாத்தா ஆன ரஜினிகாந்த்

தனது பெற்றோருடன் வசித்து வந்த சௌந்தர்யா, அதன்பிறகு சௌந்தர்யாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தொழிலதிபர் விசாகனுடன் திருமணம் நடைபெற்றது.

author-image
WebDesk
Sep 12, 2022 11:59 IST
Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் இளையமகள் செளந்தர்யா – விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் தாத்தா ஆகியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில். ரஜினிகாந்த் மீண்டும் தாத்தா ஆகியுள்ளார். ரஜினிகாந்த் – லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

இதனிடையே அஸ்வின் என்பரை திருமணம் செய்துகொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். அதனைத் தொடர்ந்து தனது பெற்றோருடன் வசித்து வந்த சௌந்தர்யா, அதன்பிறகு சௌந்தர்யாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தொழிலதிபர் விசாகனுடன் திருமணம் நடைபெற்றது.

இதனிடையே சௌந்தர்யா பட தயாரிப்பு துறையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஹோட்டி (HOOTE) என்ற சமூக வலைதளத்தி நிர்வகித்து வருகிறார் இந்நிலையில், சௌந்தர்யா – விசாகன் தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில். கடவுளின் அபரீதமான கருணை பெற்றோரின் ஆசீர்வாதம், விசாகன் வேத், மற்றும் நான் வேத்தின் இளையமகன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மருத்துவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

#Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment