scorecardresearch

போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்.. தீபாவளி வாழ்த்து!

ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ”பறக்கும் முத்தம்” கொடுத்தும் தன் அன்பை பரிமாறிக் கொண்டார்.

Rajinikanth participate to Puneeth event on November 01

தீபாவளியை முன்னிட்டு ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

தீபாவளியை முன்னிட்டு போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பு ரசிகர்கள் கூடினார்கள். அவர்களை ரஜினிகாந்த் சந்தித்தார்.
வீட்டிற்குள் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். தொடர்ந்து ”பறக்கும் முத்தம்” கொடுத்தும் தன் அன்பை பரிமாறிக் கொண்டார்.

முன்னதாக ரஜினிகாந்த் வீடு முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் தலைவா தலைவா என கோஷமிட்டனர். இந்தச் சந்திப்பின்போது ரஜினிகாந்த் பேசவில்லை.
ரஜினிகாந்த் வீடு முன்பு ரசிகர்கள் கூடிய நிலையில் ஏராளமான பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களும் அங்கிருந்தனர். எனினும் அவர் பத்திரிகை, ஊடகம் உள்பட யாரையும் சந்திக்கவில்லை. எதுவும் பேசவும் இல்லை.

ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்துவிட்டு, புன்னகையுடன் வாழ்த்துகளை பரிமாறிவிட்டு சென்றுவிட்டார்.
தொடர்ந்து தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor rajinikanth extended wishes to our fans in poyes garden

Best of Express