ரஜினிகாந்த், 45 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் நடிகர்.
பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக மாறிய ரஜினியைதான் உலகம் அறியும். ஆனால் அவரது இளவயதில், வறுமை அவரை வாட்டி வதைத்தது. எப்படியாவது பணக்காரனாகி விடவேண்டும் என்ற எண்ணத்தில் தான் தான் சினிமாவுக்கு வந்ததாக ரஜினியே பலமுறை மேடையில் சொல்லியிருக்கிறார்.
ரனியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அப்படி ஒன்றும் அவருக்கு எளிதில் கிடைத்துவிட வில்லை. அப்போது சினிமாவுக்கென ஒரு இலக்கணம் இருந்தது. தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், முத்து ராமன். ஜெய்சங்கர், கமல்ஹாசன் போன்ற நடிகர்களை கண்ட தமிழ் சினிமா, ஹீரோ என்றால் பார்க்க கலராக இருக்க வேண்டும், மழித்த முகத்துடன் வழுவழுவென இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்தை வைத்திருந்தது.
ஆனால் ரஜினி அதற்கு நேர் எதிர். தன்னால் ஹீரோவாக முடியாது, எனவே சாதரண வில்லன் வேடம் கூட கிடைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் தான் ரஜினியும் இருந்தார்.
அப்போதுதான் முதல்முறையாக ரஜினி ஹீரோவாக நடித்து, வெளிவந்த பைரவி’ படம் வசூல் சாதனை படைத்தது. அந்த வெற்றியிலிருந்து தான், ரஜினியுடன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் சேர்ந்து கொண்டது. தொடர்ந்து, ரஜினி நடிப்பில் வெளியான, “முள்ளும் மலரும்’ (1978), “ஆறிலிருந்து அறுபது வரை’ (1979) இரண்டுமே மிகப்பெரிய வெற்றியைத் தந்தன.
அதுவரை, கலரான ஹீரோக்களை மட்டுமே பார்த்த ரசிகர்கள் திரையில் தங்களை போன்று ஒருவன் வருவதை பார்த்ததும் ரஜினியை தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டனர். அன்றிலிருந்து இன்றுவரை ரஜினி’ ரசிகர்கள் மத்தியில் ஓரு தெய்வீக அந்தஸ்தில் இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், பதினாறு வயதினிலே படப்பிடிப்பின் போது ரஜினிக்கு நேர்ந்த அவமானம் குறித்த ஒரு செய்தி இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
பதினாறு வயதினிலே படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல். பாரதி ராஜா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமனி நடிப்பில் 1977 ஆம் ஆண்டு வெளியான படம் பதினாறு வயதினிலே.
இதில் பரட்டை என்ற கேரெக்டரில் நெகட்டிவ் ரோலில் ரஜினி நடித்திருப்பார். இந்த பட சூட்டிங்கின்போது, 4 வகையான உணவு வருமாம். அதில் முதல் தரம் கமலுக்கும், 2வது தரம் இயக்குனர் பாரதிராஜாவுக்கும், 3வது தரம் ஸ்ரீதேவிக்கும் வழங்கப்படும்.
4வது தர சாப்பாடு தான்’ மற்ற துணை நடிகர்கள் மற்றும் படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும். அப்படி இருக்கும்போது ஒருநாள் மதியம் சக துணை நடிகர்களுடன், ரஜினியும் உணவு சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்.
அப்போது உணவு பரிமாறுபவர், அசைவு உணவு எடுத்து வருவதை பார்த்த ரஜினி, அவரிடம் முட்டை இருந்தா கொடுங்க என கேட்க, அதற்கு அந்த நபர், ‛இப்போ தான் கோழி அடைப்பு எடுத்திருக்கிறது என கிண்டலாக கூற, ரஜினியின் முகமே வாடிப்போய் விட்டது.
ஆனால் காலங்கள் ஓடின. அன்று பரட்டையாக இருந்த ரஜினி, பிறகு சூப்பர் ஸ்டாராகி விட்டார். இப்போது வீரா படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது மீண்டும் அதே உணவு பரிமாறுபவரை ரஜினி சந்தித்துள்ளார். பழைய வலியை மறக்காத ரஜினி, மீண்டும் அவரிடம் முட்டை இருக்கிறதா என கேட்டுள்ளார்.
அந்த நபரோ சூப்பர் ஸ்டார் முட்டை கேட்டு இல்லை என்று சொல்ல முடியுமா என நினைத்து’ இதோ எடுத்து வருகிறேன் என கூற, அதற்கு ரஜினி, இப்போ கோழிக்கு இப்போ அடைப்பு எடுக்கலையா என கேட்க, எதிரே இருந்தவரின் முகம் கோணிவிட்டது.
இப்படி ரஜினி பழையதை மறக்காமல் இருந்ததால் தான் இன்று சூப்பர் ஸ்டார் அளவுக்கு முன்னேற முடிந்தது என சமீபத்தில் நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சியொன்றில் பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து கூறியிருக்கிறார். இதோ அந்த வீடியோ!
அண்ணன் மதுரை முத்து செம்ம பேச்சு… சூப்பர்ஸ்டார்ன்னா சும்மாவா…. தலைவர் @rajinikanth 72வயதில் 400கோடி பட்ஜெட்… #Thalaivar169#SuperStarRajinikanth pic.twitter.com/ogfhesDvZU
— Shankar SP (@rajini_sp) January 16, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“