scorecardresearch

மதுவை மறந்த ரஜினிகாந்த்… அதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா? கிளாசிக் பிளாஷ்பேக்

தற்போது இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

மதுவை மறந்த ரஜினிகாந்த்… அதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா? கிளாசிக் பிளாஷ்பேக்

தமிழ் சினிமாவில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ரஜினிகாந்த் தனது முதல் படத்தில் தனக்கு நடிகர் நாகேஷ் நடிப்பு சொல்லிக்கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

தொடர்ந்து மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆயிரம் ஜென்மங்கள், முல்லும் மலரும், பைரவி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்த ரஜினிகாந்த் பின் நாளில் பைரவி படத்தின் மூலம் தனி ஹீரோவாக நடித்து தற்போது அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள தமிழ் சினிமா நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்.

Rajinikanth participate to Puneeth event on November 01

தற்போது இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் நடிகர் ரஜினிகாந்த்,ர நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக திகழும் நடிகர் ரஜினிகாந்த், தான் சினிமாவுக்கு வந்த தொடக்க காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்துள்ளார். இதனிடையே தனது முதல் பட அனுபவம் குறித்து பேசியுள்ள ரஜினிகாந்த் கூறுகையில்,

எனது முதல் படம் அபூர்வ ராகங்கள். அந்த படத்தில் லெஜண்ட் நடிகர் நாகேஷ் சாருடன் நடித்த பெருமை எனக்கு இருக்கு. அந்த அபூர்வராகங்கள் படத்தில் நான் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன். அப்போது நாகேஷ் சார் என்னை கூப்பிட்டு, ஒன்னும் பெரிய இதே கிடையாது நீங்க டென்ஷன் ஆகாதீங்க பாலச்சந்தர் சார் பாலு என்ன செய்றாரோ அதை அப்படியே இமிடேட் பண்ணிடுங்க போதும் அதைதான் நான் பண்ணிட்டு இருக்கேன்.

அவர் சொன்னது போல் அதன்பிறகு ரொம்ப ஈஸியா இருந்துச்சு. நாகேஷ் சார் பண்ற ஒரு காமெடி, டைமிங் ஆக்ஷன் ரியாக்ஷன், டைலாக் டெலிவரி எல்லமே பாலச்சந்தர் சாருடைய ரிபீட்தான். பாலச்சந்தர் சாரின் முதல் சிஷ்யன் என்று சொன்னால் அது நாகேஷ் சார்தான். தப்பு தாளங்கள் படத்தில் நடித்தபோது, ஒருநாள் 7 -8 மணிக்கு பேக்கப்னு சொல்லிட்டாங்க. நான் போய் குளிச்சிட்டு கொஞ்சம் மது குடிச்சிட்டு இருந்தேன். 10 மணி இருக்கும் அப்போ அசிஸ்டென்ட் டைரக்டர் அமீர்ஜான் சார் உடனே கூப்பிடுறாங்க ஒரு ஷாட் மிஸ் ஆகிடுச்சுனு நீங்க உடனே வரனும்னு சொன்னாரு

Rajinikanth

அதை கேட்டு நான் ஆடிப்போய்ட்டேன். தண்ணிவேற போட்ருகேன். அப்போது என்ன பண்றதுனு தெரியாம குளிச்சிட்டு பல்லு வௌக்கிட்டு வாய்க்கு ஸ்பிரே எல்லாம் அடிச்சு மேக்கப் போட்டு அப்படியே நிக்கிறேன். பாலச்சந்தர் சார் கிட்ட போக கூடாதுனு ரொம்ப ட்ரை பண்றேன். ஆனா அவர் கண்டுபிடிச்சிட்டாரு. ஸ்மெல் தெரிஞ்சிபோச்சு.

கொஞ்சம் என்னோட ரூம்க்கு வா என்று சொன்னார். அங்க போய் உட்கார்ந்தேன். அவர் ஒன்னும் சொல்ல நாகேஷ் தெரியுமா தெரியும் சார் எப்பேர்பட்ட ஆர்டிஸ்ட்னு தெரியுமா தெரியும் சார் அவன் முன்னாள நீ ஒரு இரும்புக்கு கூட சமம் இல்ல. தண்ணிப்போட்டு அவனே வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிக்கிட்டான். இனிமேல் ஷூட்டிங்ல தண்ணிப்போட்டதை பார்த்தேன் செருப்பாலே அடிப்பேன் அப்படி சொன்னார்.

அன்னைக்கு நான் விட்டதுதான். எங்கு சென்றாலும் என்ன குளிர் இருந்தாலும் ஒரு சொட்டு தண்ணி கூட இதுவரை சாப்பிட்டது கிடையாது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor rajinikanth has said why he stopped drinking alcohol

Best of Express