மன்னர் ராஜ ராஜ சோழன் இந்துவா இல்லையா என்பது தொடர்பான விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான் ராஜ ராஜா சோழன் வம்சனம் வீர சைவன் என்று மன்னன் படத்தில் ரஜினிகாந்த் சொல்லும் வசனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன். நமது அடையாளத்தை பறிக்கின்றனர்.
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவது, ராஜ ராஜ சோழன் இந்து என குறிப்பிடுவது என நமது அடையாளங்கள்பறிக்கப்படுகிறது. இது சினிமாவில் தொடர்ந்து நடந்து வருவதாக குறிப்பிட்டார். வெற்றிமானின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பாஜக தலைவர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளான விவாதமாக மாறியுள்ள நிலையில், வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன், மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்ற சொல்லே இல்லை. இது ஆங்கிலேயர் கொடுத்தது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
மேலும் வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை என்பதை மாற்றி சைவ சமய அறநிலையத்துறை மற்றும் வைனவ சமய அறநிலையத்துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் இப்போது இந்த சர்ச்சை நாட்டுக்கு தேவையா என்று காட்டமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சமூக வலைளதங்களில் பெரும் விவாதம் கிளம்பியுள்ள நிலையில், ராஜ ராஜ சோழன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய மன்னன் படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் குஷ்புவிடம் பேசும் நடிகர் ரஜினகாந்த், நான் ராஜ ராஜ சோழனின் வாரிசு வீர சைவன் என்று கூறுகிறார். அதற்கு ஏற்றார்போல் நெற்றியில் திருநீறு பட்டை அடித்திருபபார். இப்போது இந்த வீடியோவை ட்ரெண்டிங் ஆக்கும் நெட்டிசன்கள் தங்களது பதிவுகளில் பாஜக தலைவர்களை டேக் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“