அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த படம் வெளியானது நயன்தாரா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார் கலவையாக விமர்சனங்களை பெற்றாலும் இந்த படம் வசூலை குவித்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்து ரஜினி யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், திடீரென நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்க உள்ளதாவும் இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும். அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் டைட்டில் ஜெயிலர் என்று வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15 அல்லது 22ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் பச்சன், மற்றும் பிளாஷ்பேக் போஷனில் இளம் வயது ரஜினியாக சிவகார்த்திகேயனும் முக்கிய கேரக்டர்களில், பிரியங்கா அருள் மோகன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாத நிலையில், 'ஜெயிலர்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில். 71 வயதாகும் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் 32 வயது இளம் நடிகையுடன் காதல் வயப்படுவார். இருப்பினும், காதல் காட்சிகள், நகைச்சுவைகள் அல்லது சண்டைகள் எதுவாக இருந்தாலும் தலைவர் எப்போதும் திரையில் மின்னுவார். இதற்கு அவரது ரசிகர்கள் குறை சொல்ல மாட்டார்கள். இந்த ஜோடி இணைந்து செயல்படப் போகிறார்களா அல்லது கதையில் வேறு திருப்பம் உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே அண்ணாத்த படத்தில் 36 வயதான நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“