நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா. இவர் காணொலி ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில், “நானும் முனீஸ் ராஜாவும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டோம்.
நாங்கள் தற்போது சேர்ந்து வாழவில்லை; பிரிந்து சில மாதங்கள் ஆகின்றன. நான் எனது அப்பாவை காயப்படுத்தி விட்டேன். எனக்கு ஓர் பிரச்னை என்றதும் என்னை காப்பாற்றியது அவர்தான்.
அவரிடம் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” எனத் தெரிவித்துள்ளார். பிரியா, முனீஸ்ராஜா திருமணத்துக்கு ராஜ்கிரண் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரியா, வீட்டில் உள்ள எதிர்ப்பையும் மீறி முனீஸ்ராஜாவை கரம்பிடித்தார். தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக கூறியுள்ளார்.
ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, சின்னத் திரைகளில் சில தொடர்களில் நடித்துள்ளார். முனீஸ்ராஜாவும் சின்னத் துறையில் நடிகராக உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“