New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/ramar.jpg)
நகைச்சுவை நடிகர் ராமர் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா கெட்டப்பில் வந்து அரங்கமே அதிர நகைச்சுவை கேலி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நகைச்சுவை நடிகர் ராமர் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா கெட்டப்பில் வந்து அரங்கமே அதிர நகைச்சுவை கேலி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் இன்று இவர் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தனது நகைச்சுவை உணர்வாலும் நகைச்சுவை நடிப்பாலும் வளர்ந்துள்ளார் ராமர். விஜய் டிவியில் முதலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே வந்த ராமர் தனது நகைச்சுவை நடிப்பால் கலக்கி வருகிறார். அதிலும், அவர் பெண் வேடமிட்டு வரும்போது அவரைப் பார்த்த உடனே பார்வையாளர்கள் சிரித்துவிடுவார்கள். ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று தொலைக்காட்சி நடிகையின் வசனத்தை கேலி செய்யும் ராமரின் நடிப்பு பலரையும் வயிறு வலிக்க சிரிப்பூட்டக் கூடியது.
விஜய் டிவியில் அவருடைய நகைச்சுவைக்காகவே ராமர் வீடு என்ற நிகழ்ச்சி உருவானது. அந்த அளவுக்கு ராமர் கலாட்டா கலாய்கள் பிரபலமானது.
ராமர் ஐயா.. ultimate-யா நீங்க! ???? #SoundParty - நாளை மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/pEaiRFUERc
— Vijay Television (@vijaytelevision) December 12, 2020
இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சவுண்ட் பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமர் பிரியங்கா கெட்டப்பில் வந்து பிரியங்காவை செமயாக கலாய்த்த நகைச்சுவை வீடியோவை விஜய் விவி புரமோவாக வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 13ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பானது.
சவுண்ட் பார்ட்டி நிகழ்ச்சியில் விஜய் டிவி நடிகைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்ச்யில் பிரியங்கா போல ஸ்கர்ட் அணிந்து வரும் பிரியங்கா கெட்டப்பில் வந்த ராமர், பிரியங்கா போல ஒரு பாடலைப் பாடி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். ராமரின் நடிப்பை பார்த்த பிரியங்கா பயங்கரமாக சிரிக்கிறார். பிரியங்கா கெட்டப்பில் ராமரின் நகைச்சுவை நடிப்பை பார்த்து பார்வையாளர்கள், நடிகைகள் அனைவரும் அரங்கமே அதிரும்படி சிரிக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல இந்த வீடியோவைப் பார்க்க அனைவரும் அப்படித்தான் சிரிப்பார்கள். நீங்களும் பாருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.