சர்ப்ரைஸ் கொடுத்த ரவி மோகன்; கிராண்ட் ஓபனிங்க்கு தயாராகும் ஸ்டுடியோ: லேட்டஸ்ட் அப்டேட்!

வெற்றிகரமான நடிகராக வலம் வரும் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கவுள்ளார். அதை ஒரு பிரம்மாண்டமான விழாவாக நடத்த இருக்கின்றார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வெற்றிகரமான நடிகராக வலம் வரும் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கவுள்ளார். அதை ஒரு பிரம்மாண்டமான விழாவாக நடத்த இருக்கின்றார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-26 110712

ரவி மோகன் தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர்களில் ஒருவர். எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் முனைவர். கதைக்கு மேல் அவரது நடிப்பு ஒவ்வொரு படத்திலும் வளர்ச்சியடைந்து வருகிறது. சமீபத்தில் சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாதிருந்தாலும், தமிழ் திரையுலகில் அவர் முக்கியமான இடத்தை தக்கவைத்து உள்ளார். தற்போது நடிகராக மட்டுமல்லாது, இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று வருகின்றார்.

ரவி மோகன், கார்த்திக் யோகியின் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், அந்தப்படத்தை அவர் தானே இயக்கவும் தீர்மானித்துள்ளார். இந்த தகவல் சில மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், தனது இயக்குனரான பயணத்தை விரைவில் தொடங்க இருப்பதாக ரவி மோகன் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார். தற்போது, யோகி பாபுவை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து தனது இயக்குநராகிய முதல் படத்தை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், இந்த அனைத்து தகவல்களையும் இன்று ஒரு சிறப்புவிழாவின் மூலம் ரவி மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். அவர் ஆரம்பித்துள்ள தனது தயாரிப்பு நிறுவனம் "ரவி மோகன் ஸ்டுடியோஸ்" இன் தொடக்க விழாவை மிக விமரிசையாக நடத்த திட்டமிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடைபெற்றுவருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இன்று ரவி மோகன் ஸ்டுடியோஸின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக ரவி மோகன் நேரில் சென்று நடிகர் கமல்ஹாசனை அழைத்து வந்துள்ளார். கமலின் தீவிர ரசிகராக உள்ள ரவி மோகன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். 

அவரை சந்தித்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும், தனது காதை வெளிப்படுத்தும் விதமாக, கமலுக்கு ஒரு சிறப்பு பரிசையும் ரவி மோகன் வழங்கியுள்ளார்.

சிங்கத்தின் மீது கமல் சவாரி செய்யும் ஒரு சிறப்பான புகைப்படத்தை, அன்பின் அடையாளமாக ரவி மோகன் கமலுக்கு பரிசளித்துள்ளார். சினிமா உலகில் தன்னை உருவாக்க உதவிய முன்னோடியைத் தான் தொடங்கும் தயாரிப்பு நிறுவனத்தின் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதைக் குறித்து ரவி மோகன் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் என்பதை அவரது முகத்திலேயே பார்க்கலாம். 

இதேபோல், நடிகர் கார்த்தியையும் விழாவிற்கு அழைத்துள்ள ரவி மோகன், அவருக்கும் ஒரு நினைவுப் புகைப்படத்தை அன்பான பரிசாக வழங்கியுள்ளார்.

இன்னும் பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என தெரிகின்றது. இன்று ரவி மோகன் ஸ்டூடியோ திறப்பு விழா மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் பல முக்கியமான அறிவிப்புகளை ரவி மோகன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்கப்போகும் படங்கள் என்னென்ன ? தான் இயக்கப்போகும் படம் என்ன ? என்பதை பற்றியெல்லாம் இவ்விழாவில் ரவி மோகன் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறாராம்.

ஜெயம் மூலம் வெற்றிகரமான நடிகராக அறிமுகமாகி இன்று தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கின்றார் ரவி. அதைப்போல ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ரவி வலம் வருவார் என ரசிகர்களும் திரைபிரபலங்களும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: