/indian-express-tamil/media/media_files/2025/09/12/rk-suresh-2025-09-12-21-34-52.jpg)
பாலா - சசிகுமார் என்ட உண்மை சொல்லவே இல்ல; ஒரு சீன் மட்டும் 33 டேக் போச்சு: தாரை தப்பட்டை வில்லன் ஓபன் டாக்
தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் ஆர்.கே.சுரேஷ். இவர் தயாரிப்பாளராக இருந்து பின்னர் நடிகராக அறிமுகமானார். ‘காடுவெட்டி’, ‘தலைவன் தலைவி’, ’மருது’, ‘பில்லா பாண்டி’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘விருமன்’ மற்றும் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் ஆர்.கே.சுரேஷின் நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது. நடிகர் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, பா.ஜ.க.-வில் நிர்வாகியாக இருந்த ஆர்.கே.சுரேஷ் தனது பதவியில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.
இப்படி பல சர்ச்சைகளில் சிக்கினாலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் ஆர்.கே.சுரேஷ் ‘தாரை தப்பட்டை’ படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, "கருப்பையா கதாபாத்திரத்திற்கு ஒரு மாற்றம் இருக்கும் என்று எனக்கு உண்மையாகவே தெரியாது.
இயக்குநர் பாலா சாரே என்னிடம் சொல்லவில்லை. புகைப்பிடிக்கும் காட்சி எடுக்கப்போறாங்கனு எனக்கு தெரியாது. அதற்கு முன்பு வரை கண்ணாடியை போட்டுவிட்டு ஒரு அம்மாஞ்ஜி கதாபாத்திரமாக தான் இருந்தது. இயக்குநர் பாலா எனக்கு வில்லன் கதாபாத்திரம் என்பதை என்னிடம் சொல்லக் கூடாது என்று எல்லோரிடமும் சொல்லி வைத்திருப்பார் போல. சசிக்குமார் கூட என்னிடம் எதுவும் சொல்லவில்லை.
ஒரு முக்கியமான டெக்னீஷியன் வந்து என்னிடம் கூறினார் தம்பி நீ தான் இந்த படத்தில் வில்லன் என்று. என்னிடம் யாரும் சொல்லக் கூடாது என்று இயக்குநர் பாலா சொன்னதாகவும் கூறினார். அப்பறம் நீ நாளைக்கு எடுக்கக்கூடிய காட்சியில் காட்டப்போகும் சேஞ்ச் ஓவரில் தான் நீ நடிகனாக இருக்கணுமா இருக்கக் கூடாதா என்பது இருக்கு என்று சொன்னார். புகைப்பிடிக்கும் காட்சி மட்டும் 33 டேக் எடுக்கப்பட்டது” என்றார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷின் ஆக்ரோஷமான நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.