நாளைக்கு தியேட்டருக்கு போறோம், சும்மா மஜா பண்ணி தெறிக்க விடுறோம்; மனைவியிடம் சொன்ன ரோபோ சங்கர்; த்ரோபேக் வீடியோ!

நடிகர் ரோபோ சங்கர், தனுஷ் படம் குறித்து பேசிய த்ரோபேக் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரோபோ சங்கர், தனுஷ் படம் குறித்து பேசிய த்ரோபேக் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
shankar

நாளைக்கு தியேட்டருக்கு போறோம், சும்மா மஜா பண்ணி தெறிக்க விடுறோம்; மனைவியிடம் சொன்ன ரோபோ சங்கர்; த்ரோபேக் வீடியோ!

1978-ம் ஆண்டு மதுரையில் பிறந்த ரோபோ சங்கர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சிறுவயதில் இருந்தே மெமிக்ரி செய்வதில் ஆர்வத்துடன் இருந்த அவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில், பல கிராமங்களில் நடைபெற்ற திருவிழா மேடைகளில் தனது திறமையை வெளிக்காட்டி பலரின் கவனத்தை ஈர்த்தவர். 

Advertisment

இதையடுத்து, விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களை தன்வசப்படுத்திய ரோபோ சங்கர், அதன்பிறகு அது இது எது, உள்ளிடட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று காமெடியில் கலக்கினார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றிருந்த ரோபோ சங்கர், தனது உடலில் மெட்டாலிக் நிற பெயிண்ட்டை பூசிக் கொண்டு, ரோபோவைப் போலவே, தனது உடலை அசைத்துக் காட்டும் திறமை கொண்டவர். இதன் காரணமாக தான் அவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர் வந்தது.

1997-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ’தர்மசக்கரம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரோபோ சங்கர், அடுத்து ’படையப்பா’ படத்தில் டான்சராகவும், ’ஜூட்’, ’ஏய்’, ’கற்க கசடற’ ’தீபாவளி’, ’மதுரை வீரன்’, ’ரௌத்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். இதில் ’ரௌத்திரம்’ படத்தில் அவர் நடித்த காட்சிகள் இம்பெறவில்லை.  அதன் பின்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மாரி படத்தில் இவர் நடித்த சனிக்கிழமை கதாபாத்திரமும் பெரிய கவனம் பெற்றது. அதன் பின்னர் அவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது. கடைசியாக இவர் நடிப்பில் 'சொட்ட சொட்ட நனையுது’ என்ற படம் வெளியானது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  ரோபோ சங்கர் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில், தனுஷின் படம் குறித்து ரோபோ சங்கர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “நாளைக்கு உன் கணவனுக்கு வாழ்க்கை கொடுத்த ஒரு நபரின் படம் ரிலீஸாக போகிறது. அவர் சும்மா நடிச்சாலே சூப்பரா இருக்கும். கமலுக்கு அப்பறமா அவர் தான் இன்னைக்கு உள்ள  யூத்துகளுடைய ஆக்ட்டிங் யூனிவர்சிட்டி. இப்ப அவருடைய டிரைக்‌ஷன்னா எப்படி இருக்கும். நாளைக்கு ராயன் படத்திற்கு போறோம் சும்மா மஜா பண்ணி தெறிக்கவிடுறோம்” என்றார்.

Cinema Robo Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: