அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வரும் நிலையில் தான் இன்னும் இறக்கவில்லை என்று டி.வி. நேர்காணல் ஒன்றில் அவர் கண்ணீர் மல்க பேசியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் யசோதா. இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், யசோதா படம் தொடர்பாக டி.வி. நேர்ணால் ஒன்றில் பங்கேற்ற நடிகை சமந்தா தான் இன்னும் இறக்கவில்லை எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தெலுங்கு சேனல் ஒன்றில் நேர்ணால் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும், எனது உடல்நிலை குறித்து ஊடகங்களில் வரும் செய்திகளை தான் தவிர்க்க விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், நான் எனது இன்ஸ்டா பதிவில் கூறியது போல் சில நாட்கள் நல்லதாக இருக்கும் சில நாட்கள் கெட்டதாக அமையும்.
அதேபோல் சில நாட்கள் ஒரு அடி எடுத்து வைப்பதற்கே கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது திரும்பி பார்த்தால் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என்பது குறித்து ஆச்சரியமாக உள்ளது. எனது நிலைமை உயிருக்கு ஆபத்தானது என்பதை நான் பல கட்டுரைகளின் வாயிலாக தெரிந்துகொண்டேன்.
இப்போது என்னுடைய நிலை உயிருக்கு ஆபத்தானதாக இல்லை. அதே சமயம் நான் இன்னும் இறக்கவில்லை என்ற தலைப்பு செய்திகள் அவசியமானது என்று தோன்றவில்லை. என்று கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil