/indian-express-tamil/media/media_files/2025/09/16/leo-2025-09-16-17-29-59.jpg)
லியோ கொடுத்த வெளிச்சம், கொடூர வில்லனாக மாறிய சாண்டி; பதற வைக்கும் டீசர் வீடியோ!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி பலரை வெள்ளித்திரையில் ஜொலிக்க வைத்த ஒரு பிரம்மாண்டமான மேடையாக அமைந்தது. அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி இன்று தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பிரபல நடன கலைஞராக வலம் வருபவர் தான் சாண்டி மாஸ்டர்.
இவர் நடன ஆசிரியர் கலா மாஸ்டரிடம் மாணவனாக அறிமுகமாகி, பின்னர் அவரது உதவியுடன் சின்னத்திரையில் அறிகமாகி, இன்று வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். சாண்டி மாஸ்டர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன கலைஞராக இருந்துள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சியின் வெளியான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தில் சாண்டி, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் கடையில் சென்று ‘சாக்லேட் காஃபி’ என கேட்பதும் விஜய் உடன் சண்டை போடுவது என தனது திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
யார் இது நம்ம சாண்டி மாஸ்டரா இப்படி நடிச்சிருக்காரு என ரசிகர்கள் ஆச்சர்ப்படும் அளவிற்கு தனது அபார திறமையை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, சாண்டி மாஸ்டர் முழு நேர வில்லன் கதாபாத்திரத்தில் இறங்கியுள்ளார். அதாவது, இயக்குநர் கவுஷிக் பேகல்பட்டி இயக்கத்தில் பெல்லங்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த ஹாரர்-த்ரில்லர் திரைப்படம் "கிஷ்கிந்தாபுரி".
இந்த படத்தில், சாண்டி மாஸ்டர், தனிக்கெல்லா பாரணி, ஸ்ரீகாந்த் அய்யங்கார், ஹைப்பர் ஆதி, மக்ரந்த் தேஷ்பாண்டே, சுதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 12-ந் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் இப்படத்தின் டிக்கெட் விற்பனை அதிகரித்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், `கிஷ்கிந்தாபுரி' படத்தில் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் வித்தியாசமான தோற்றத்தில் வில்லன் லுக்கில் மிரட்டுகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல், சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் ‘லோகா’ திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The Peak villianism Arc performed by a choreographer 📈📈📈❤️🔥🥵#SandyMasterpic.twitter.com/STY27h2CDN
— Karthikuuu (@ThisIsKarthik_7) September 15, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us