Advertisment

நடிகர் சந்தானத்தின் மனைவி இவர்தான்... திருமண விழா போட்டோ வைரல்!

நடிகர் சந்தானத்தின் மனைவி யார், எப்படி இருப்பார் என்று பொதுவெளியில் அறியப்படாமல் இருந்த நிலையில், இப்போது சந்தானம் மற்றும் அவரது மனைவி திருமணக் கோலத்தில் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
actor santhanam, actor simbu, str, tamil cinema, சிம்பு, சந்தானம், தமிழ் சினிமா

நடிகர் சந்தானமும் அவரது மனைவியும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சந்தானத்தின் மனைவி யார், எப்படி இருப்பார் என்று பொதுவெளியில் அறியப்படாமல் இருந்த நிலையில், இப்போது சந்தானம் மற்றும் அவரது மனைவி திருமணக் கோலத்தில் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

அடித்தட்டில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி உச்சத்தில் வெற்றிக்கொடி நாட்டி இருப்பவர் என்றால் அவர்தான் நடிகர் சந்தானம். விஜய் டிவியில் லொள்ளு சபாவில் நடித்து பிரபலமான நடிகர் சந்தானம், தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறினார். விஜய், அஜித், ரஜினி என அனைத்து பெரிய ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். 

இதற்கு பிறகு, நடிகர் சந்தானம் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை, சினிமாவில் நடித்தால் இனிமேல் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று உறுதி எடுத்தார். கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஏ1, டிக்கிலோனா, ஏஜெண்ட் கண்ணாயிரம், டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குபட்டி ராமசாமி என பல படங்களில் தொடர்து ஹீரோவாக நடித்துள்ளார்.

santhnam wife

இந்நிலையில், நடிகர் சந்தானத்தின் மனைவி உஷாவின் புகைப்படம் திடீரென சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை சந்தானத்தின் மனைவியைப் பார்க்காத சினிமா ரசிகர்கள் இவரு தானா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

santhnam wife

நடிகர் சந்தானமும் அவரது மனைவியும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Santhanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment