scorecardresearch

அந்தக் கால சாக்லேட் பாய்: தமிழ் சினிமாவின் ஜமீன்தார்: மறைந்தார் சரத் பாபு

தமிழ் திரையுலகின் ஜமீன்தார், அந்தக் கால சாக்லேட் பாய் சரத் பாபு மறைந்துள்ளார். அவருக்கு வயது 71

Actor Sarath Babu passed away at a private hospital in Hyderabad
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் சரத் பாபு மறைந்தார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நண்பராக பல படங்களில் முத்திரை பதித்தவர் நடிகர் சரத் பாபு. அதற்கு உதாரணமாக முத்து படத்தை கூறலாம்.
நடிகர் சரத் பாபுவின் தந்தை ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அந்தத் தொழிலில் சரத் பாபுவுக்கு நாட்டம் இல்லை. சினிமாவுக்குள் நுழைந்தார்.

எனினும் அவருக்கு வெற்றி எளிதில் கிடைக்கவில்லை. அதற்காக தீவிரமாக போராடினார். அவரின் நடிப்புக்கு தீனி போடுவதுபோல் இயக்குனர் கே. பாலசந்தரின் நிழல் நிஜமாகிறது படம் அமைந்தது.
இந்தப் படம் சரத் பாபுவின் அறிமுகம் நிகழ்ந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில் 1978ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் மூலம சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான முகமானார் சரத் பாபு.

சரத் பாபு நல்ல உயரும் அழகும் கொண்டவர். இதனால் அவரை அந்தக் காலத்தில் சாக்லேட் பாய் என்றே அழைத்தனர். எனினும் அவருக்கு மண வாழ்க்கை சரியாக அமையவில்லை.
ஆரம்பம் முதலே சறுக்கல்களை சந்தித்தார். முதல் மனைவியின் விவாகரத்துக்கு பின்னர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதுவும் அவருக்கு நிலைக்கவில்லை. தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் டாக்டர், பணக்கார ஜமீன்தார் உள்ளிட்ட படங்களில் சரத் பாபு நடித்துள்ளார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் உற்ற நண்பராகவும் சரத் பாபு திகழ்ந்தார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடர்களிலும் சரத் பாபு நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor sarath babu passed away at a private hospital in hyderabad

Best of Express