பெரிய சல்மான் கான் மாதிரி... சித்தார்த்தை கலாய்த்து தள்ளிய சரத் குமார்; 3 பி.எச்.கே சக்சஸ் மீட் கலகல!

3 பி.எச்.கே திரைப்படம் சக்சஸ் மீட்டில் மேடையிலேயே நடிகர் சித்தார்த்தை நடிகர் சரத்குமார் கலாய்த்துள்ளார்.

3 பி.எச்.கே திரைப்படம் சக்சஸ் மீட்டில் மேடையிலேயே நடிகர் சித்தார்த்தை நடிகர் சரத்குமார் கலாய்த்துள்ளார்.

author-image
WebDesk
New Update
siddharth sarathkumar

சமீபத்தில் வெளியாகி தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள திரைப்படம் '3BHK' (3 பெட்ரூம் ஹால் கிச்சன்). நடுத்தர குடும்பங்களின் சொந்த வீடு கனவை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

'எட்டு தோட்டாக்கள்' மற்றும் 'குருதி ஆட்டம்' போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ், '3BHK' படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய '3BHK வீடு' என்ற சிறுகதையைத் தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாடகை வீட்டின் கஷ்டங்கள், சொந்த வீடு வாங்கும் கனவு, அதற்காக ஒரு குடும்பம் படும் போராட்டங்கள் என அனைத்தையும் மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருப்பதாக விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சரத்குமார், தேவையாணி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு நடுத்தர குடும்பம் வீடு கட்ட படும் தியாகங்கள் மற்றும் போராட்டங்களை இந்தப் படம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

'3BHK' படத்தின் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சரத்குமார், தனது மகனாக நடித்த நடிகர் சித்தார்த்தை நகைச்சுவையாகக் கலாய்த்தார். சல்மான்கான் போல கண்ணாடியை சட்டையின் பின்னால் வைத்துக் கொண்டு மேடைக்கு வரக்கூடாது என்று கூறி, "சாரி சொல்லி அதை முன்னால் எடுங்கள்" என அனைவர் முன்னிலையிலும் வேடிக்கையாகச் சொன்னது, அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. தி சினிமாஸ் யூடியூப் பக்கத்தில் இந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த சுவாரசியங்கள் அனைத்தும் பதிவிடப்பட்டுள்ளது. அதில் தான் சரத்குமார் சித்தார்த்தை கலாய்த்து பேசியுள்ளார்.

Advertisment
Advertisements

மொத்தத்தில், '3BHK' திரைப்படம் நடுத்தர மக்களின் உணர்வுகளுக்கு நெருக்கமான ஒரு கதையுடன், அழுத்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

Sarath Kumar Siddharth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: