நடிகர் சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். இவர் பிரபல தன்னார்வ நிறுவனமான அக்ஷய பாத்திரம் என்ற நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார்.
சமீபத்தில், அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த பேட்டிக்கு பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய இருக்கிறாரா என்று பல்வேறு கருத்துக்களும், தகவல்களும் வெளிவந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறாரா திவ்யா சத்யராஜ் ?
அவ்வாறு வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் திவ்யா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில்,
“மனதால் நான் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிஸம்தான் சமத்துவத்தைக் கட்டமைக்கும், சுரண்டலைத் தடுக்கும். எனக்கு நல்லகண்ணு அய்யாவைப் பற்றி நன்கு தெரியும். ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு எளிமையுடனும் சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்பதற்கு அவர் உதாரணம். சாதிகளற்ற சமூகத்தின் கொள்கைகளுக்காக, எதையும் தியாகம் செய்யக்கூடியவர்.
Sathyaraj’s daughter #DivyaSathyaraj to join the Communist Party ?
Here’s the clarification press note from her desk. @DoneChannel1 pic.twitter.com/pvvUENNb8H
— Diamond Babu (@diamondbabu4) 15 October 2018
தற்போது என்னுடைய நோக்கம் முழுவதும், தமிழகத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குப் போதுமான சத்துள்ள உணவை அக்ஷய பாத்திரம் மதிய உணவுத் திட்டம் மூலம் கிடைக்கச் செய்வதே ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.