Advertisment

டாக்டர் படிச்சிட்டு சினிமாவுக்கு வந்த அதிதி... அதே பாதையில் திவ்யா சத்யராஜ்?

பெரியாரின் கொள்கை பிடித்தவரான திவ்யா நியூட்ரிஷன் படித்து முடித்துவிட்டு இந்தியாவின் முன்னணி நியூட்ரிஷன்களில் ஒருவராக இருக்கிறார்.

author-image
WebDesk
New Update
டாக்டர் படிச்சிட்டு சினிமாவுக்கு வந்த அதிதி... அதே பாதையில் திவ்யா சத்யராஜ்?

80-90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் சத்யராஜ். 1978-ம் ஆண்டு வெளியான சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். மேலும் கமலுடன் விக்ரம், விஜயகாந்துடன் 100-வது நாள், உள்ளிட்ட பல படங்களில் இவர் வில்லனாக நடித்து பெரிய வரவேற்பை பெற்றார்.

Advertisment

இதனிடையே கடந்த 1986-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமானார். சின்னப்பதாஸ் என்ற கேரக்டருக்கு உயிர்கொண்டுத்த சத்யராஜூக்கு கடலோட கவிதைகள் படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு பல படங்களில் நாயகனாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார.

publive-image

இதில் தனது 100-வது படமான வில்லாதி வில்லன் என்ற படத்தை தானே இயக்கி 3 கேரக்டர்களில் நடித்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாது இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமை கொண்ட நடிகர் சத்யராஜ் தற்போது தென்னிந்திய மொழிகளில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் இவர் பாகுபதி படத்தில் நடித்த கட்டப்பா கேரக்டர் உலகளவில் பெரும் பிரபலமானது.

தற்போது சத்யாராஜ் என்ற பெயரை விட கட்டப்பா என்று சொன்னால் தான் வேற்று மொழி ரசிகர்களுக்கு தெரியும் அளவுக்கு பாகுபலி படம் சத்யராஜூக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ் பெரியாரின் தீவிர ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சமீபத்தில் வெளியான வீட்ல விஷேஷம் என்ற படத்தில் நடித்திருந்த சத்யராஜ் தற்போது சிவகார்த்திகேயனுடன் ப்ரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

1979-ம் ஆண்டு மகேஷ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்ட சத்யராஜூக்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் தந்தையை போல் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். ஆனால் தந்தையை போல பெரியாரின் கொள்கை பிடித்தவரான திவ்யா நியூட்ரிஷன் படித்து முடித்துவிட்டு இந்தியாவின் முன்னணி நியூட்ரிஷன்களில் ஒருவராக இருக்கிறார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் திவ்யா சத்யராஜ் உணவு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதே சமயம் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர், சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், திவ்யா சத்யராஜ் விரைவில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே டாக்டருக்கு படித்துவிட்டு இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ள நிலையில், அந்த வரிசையில் விரைவில் திவ்யா சத்யராஜ் இணைவார் என்று பலரும் கூறி வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sathyaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment