Advertisment

சமூக பிரச்சனைகளை வெளிகாட்டும் படத்தில் நடிகர் சத்யராஜ்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sathyaraj, தீர்ப்புகள் விற்கப்படும்

Sathyaraj, தீர்ப்புகள் விற்கப்படும்

சத்யராஜ் நடிக்கும் புதிய படமான தீர்ப்புகள் விற்கப்படும் போஸ்டரை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ளார்.

Advertisment

கொடுக்கும் கேரக்டரை கச்சிதமாக நடிப்பவர்கள் பட்டியலில் நடிகர் சத்யராஜுக்கு நீங்கா இடமுண்டு. இவர் தற்போது அருண்ராஜா காமராஜின் கனா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு சத்ய சிவாவின் மடை திறந்து படமும் இவரது கைவசம் உள்ளது.

தீர்ப்புகள் விற்கப்படும் படம் :

இந்நிலையில் சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தீர்ப்புகள் விற்கப்படும் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தீரன் இயக்குகிறார்.

உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், சமூக விஷயங்களை உள்ளடக்கிய தரமான பொழுதுபோக்குப் படமாக ஆக்‌ஷன் த்ரில்லர் களத்தில் உருவாக இருக்கிறதாம். இதன் டைட்டில் லுக் போஸ்டரை மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ளார்.

Sathyaraj Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment