சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஷாம் வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் சூதாட்டம் விளையாடிய நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஷாம் வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் சூதாட்டம் விளையாடிய நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
Advertisment
மடாலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் ஷாம், தமிழ் சினிமாவில் 12பி, இயற்கை, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, பாலா, லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவருக்கு பெரிய அளவில் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அமையவில்லை.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் ரோட்டில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் நேற்று இரவு அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது, அங்கே சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் ஷாம் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஷாமுக்கு சொந்தமான வீட்டில் சூதாட்டம் நடந்தது தொடர்பாக போலிசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டுக்கு பல நாட்களாக அடிக்கடி நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் பலர் வந்து சட்டவிரோதாமாக சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்தது தெரியவந்தது. மேலும், நடிகர் ஷாம் தனது வீட்டை ஒரு சூதாட்ட கிளப் போல நடந்திவந்தது போலீசார் விசாரனையில் தெரியவந்தது.
பிரபல நடிகர் ஷாம் சூதாட்ட வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார், கொரோனா பரவல் காரணமாக அவர்கள் அனைவரையும் போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"