சர்வதேச விருதை வென்ற 'புளூ ஸ்டார்': சாந்தனு நெகிழ்ச்சி பதிவு

‘புளூ ஸ்டார்’ திரைப்படம் சர்வதேச விருதை வென்றது குறித்து நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

‘புளூ ஸ்டார்’ திரைப்படம் சர்வதேச விருதை வென்றது குறித்து நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
blue star

சர்வதேச விருதை வென்ற 'புளூ ஸ்டார்': சாந்தனு நெகிழ்ச்சி பதிவு

இயக்குநர் ஜெயகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் 
 அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

Advertisment

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டிருந்தார். 

விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல், அசோக் செல்வன் மற்றும் சாந்தனுவிற்கு இப்படம் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்நிலையில், இயக்குநர் ஜெயக்குமார் இயக்கிய ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. அதுமட்டுமல்லமால்,  சிறந்த நடிகருக்கான விருதை இப்படத்தில் நடித்த சாந்தனு வென்றுள்ளார்

Advertisment
Advertisements

இது குறித்து நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ‘புளூ ஸ்டார்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்த படம் எனக்கு கதாபாத்திரத்தை விட எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவுகள் மற்றும் அன்பைக் கொடுத்தது. சக நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவிலுள்ள அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பா.இரஞ்சி பல சமூகம் சார்த்த படங்களை இயக்கி வருகிறார். இவர் படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் தயாரித்தும் வருகிறார். தனது நீலம் புரொடக்‌ஷன் மூலம் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை போன்ற புதுப்புது இயக்குநர்களை வைத்து படம் தயாரிக்கிறார்.

அந்த வகையில் இயக்குநர் பா.இரஞ்சித் அறிமுகப்படுத்தியவர் தான் இயக்குநர் ஜெயக்குமார். ‘புளூ ஸ்டார்’ படத்தை இயக்கபோவதாக ஜெயக்குமார் தெரிவித்த போது முதலில் பா.இரஞ்சித் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: