தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வரும் சர்வானந்த் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
2009-ம் ஆண்டு வெளியான காதல்னா சும்மா இல்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சர்வானந்த். தொடர்ந்து நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, கணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் எங்கேயும் எப்போது படம் தமிழ் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
மேலும் கடைசியாக சர்வானந்த் நடிப்பில் வெளியான கணம் படம் டைம் ட்ராவல் அடிப்படையாக வைத்த கதையம்சம் கொண்டது. இந்த படம் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருமு் சர்வானந்த்க்கு கடந்த ஜனவரி மாதம் ரக்ஷிதா ஷெட்டி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
சர்வானந்த் - ரக்ஷிதா
Advertisment
Advertisements
இந்த நிச்சய விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற நிலையில், திரை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இன்னும் திருமண தேதி முடிவு செய்யப்படாத நிலையில், சர்வானந்த் திருமணம் நிச்சயதார்த்த்துடன் நின்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து சர்வானந்த் எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத நிலையில், அவரின் நெருங்கி வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதன்படி, கடந்த ஒரு மாத காலமாக லண்டனில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த சர்வானந்த், தற்போது இந்தியா திரும்பியுள்ளார். அவரது குடும்பத்தினர் திருமண தேதி முடிவு செய்து விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“