Advertisment

எஸ்சி என்பதால் அவமானங்களை சந்தித்திருக்கிறேன்; அந்த ஆளானு கேட்ட சீனியர் நடிகை - நடிகர் ஸ்ரீ ஓபன் டாக்

ஒரு சீனியர் நடிகை ‘இவன் அந்த ஆளானு கேட்டது’ குறித்தும் சினிமா துறையில் நிலவும் சாதி பாகுபாடு குறித்து நடிகர் ஸ்ரீ வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sreekumar

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ‘வானத்தைப்போல; சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ‘வானத்தைப்போல; சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீ சமீபத்தில் ஒரு நேர்காணலில், தான் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பல அவமானங்களைச் சந்தித்தாகக் கூறியுளார். ஒரு சீனியர் நடிகை  ‘இவன் அந்த ஆளானு கேட்டது’ குறித்தும் சினிமா துறையில் நிலவும் சாதி பாகுபாடு குறித்து நடிகர் ஸ்ரீ வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

Advertisment



பொது இடங்களில், வேலை செய்யும் இடங்களில் என பல்வேறு இடங்களிலும் சாதி பாகுபாடுகள், சாதி வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள், சாதி குழுவாக செயல்படுதல் போன்றவை பழைய காலத்தைப் போல அதிக அளவில் நடைபெறாவிட்டாலும், இந்த காலத்தில் முன்பைவிட மிகவும் கூர்மை அடைந்திருக்கிறது. அது கொடூரமானதாகவும் இருக்கிறது.  கிராமங்களில் படிக்காதவர்கள் இடையேதான் சாதி பாகுபாடுகள் இருக்கிறது என்று பேசி வந்த நிலையில், நகரங்களிலும் படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் சாதி மனநிலையும் அதன் விளைவாக பாகுபாடுகளும் இருக்கவே செய்கிறது. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சமூகத்தில், திரையரங்குகளில் அனைவரையும் சமமாக அமர வைத்தது சினிமா துறை. அந்த சினிமா துறையிலும் சாதி பாகுபாடுகள் இருக்கிறது என்பது சில ஆண்டுகளாக வெளிப்படையாகப் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடிகர் ஸ்ரீ சமீபத்தில் ஒரு நேர்காணலில், தான் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பல அவமானங்களைச் சந்தித்தாகக் கூறியுளார். ஒரு சீனியர் நடிகை  ‘இவன் அந்த ஆளானு கேட்டது’ குறித்தும் சினிமா துறையில் நிலவும் சாதி பாகுபாடு குறித்து நடிகர் ஸ்ரீ வெளிப்படையாகப் பேசியுள்ளார்.



பிரபல இசையமைப்பாளரான சங்கர் கணேஷ் மகன் நடிகர் ஸ்ரீ. சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்திருக்கிறார்.  2001-ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய நடிகர் ஸ்ரீ, அதைத் தொடர்ந்து கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், சிவசக்தி, இதயம், கனா காணும் காலங்கள், பிள்ளை நிலா, தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். 

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தைப்போல’ சீரியலில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த சூழலில்தான், அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் எஸ்சி என்பதால் சந்தித்த அவமானங்களையும், தான் சென்னை வழக்கில் பேசுவதைப் பார்த்து ஒரு சீனியர் நடிகை இவன் அந்த ஆளானு கேட்டது குறித்தும் சினிமாவில் நிலவும் சாதி பாகுபாடு குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

நடிகர் ஸ்ரீ ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பேசியிருப்பதாவது: “என்னுடைய அப்பா (சங்கர் கணேஷ்) தாஸ்புரம் ஸ்லம் ஏரியாவில் இருந்து வந்தவர். அதனால அவர் எஸ்.சி, அவர் எஸ்சி என்பதால் நானும் எஸ்ஸி தான். அதனால், நான் எஸ்சி என்ற காரணத்தால் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். சில நேரங்களில் சிலர் அப்பர் காஸ்ட் என்கிற பெயரில் நம்மை மட்டம் தட்டும்போது நான் சும்மா இருக்க மாட்டேன். அந்த நேரத்தில் நான் எல்லாரையும் சமமாக பாருங்க என்று சொல்வேன். அதனால, பல பிரச்சனைகள் வந்திருக்கிறது.

ஒருமுறை நான் ஒரு படத்தில் நடிப்பதற்காக போயிருந்தேன். பொதுவா என்னுடைய தமிழ் பேச்சு வழக்கில் சென்னை லாங்குவேஜ் வரும், அந்த மாதிரி தான் அந்த படத்தில் நான் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு ஒரு நடிகை... அதுவும் சீனியர் நடிகை தான் அவங்க என்னை பார்த்ததும்  “என்ன இவன் இப்படி பேசிகிட்டு இருக்கான் இவன் அந்த ஆளு தானா” என்று கேட்டார்.

அப்போது அருகில் இருந்தவர்  “ஆமாம், வேறு வழியில்ல அதற்காகத்தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க வைத்தேன் என்று சொன்னார். இந்த மாதிரி சினிமா துறையில் நான் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். திறமைக்கு மட்டுமல்லாமல் சாதியை வைத்து மதிப்பிடுவது தான் இன்னும் இருக்கிறது. இது போல நான் ஒரு சில இடங்களில் அவமானப்படும்போது எதிர்த்து பேசியதால் பல பிரச்சனைகளையும் அனுபவித்து இருக்கிறேன்.

அதுபோல பணம் இல்லாமலும் நான் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன் ஒருமுறை எனக்கும் என்னுடைய அப்பாவுக்கும் சில பிரச்சனை வந்தது. அதனால், அவரிடம் நான் தனியாக சாதித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். அப்போ ஒரு ஆறு வருஷம் நான் தனியா இருந்தேன். அந்த நாட்களில் பணத்தின் அருமையை நான் புரிந்து கொண்டேன்.

பணம் இல்லாமல் நான் நாய் படாத பாடுபட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய காருக்கு பெட்ரோல் போட கூட காசு கிடையாது. அந்த நேரத்தில் என்னுடைய காருக்கு டியூ கட்டாததால் பைனான்ஸ்காரர்கள் காரை தூக்க வந்துட்டாங்க. அதனால, ஆங்கர் விஜய் தெரியும்ல ஜீ தமிழ் தொகுப்பாளராக இருக்கும் விஜய்... அவன் வீட்டில் அவனிடம் கெஞ்சி கூத்தாடி அவனுடைய வீட்டுக்கு பின்னாடி என்னுடைய காரை ஒலித்து வைத்திருந்தேன்.

அதற்குப் பிறகு, அம்மாவை சில நேரங்களில் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகும் போது பார்க்கிங் கட்டுவதற்கு ரூ 5 இல்லாமல் அந்த காருக்குள்ளேயே நான் உட்கார்ந்து இருக்கிறேன். இதெல்லாம் நான் என்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள்” என்று  நடிகர் ஸ்ரீ வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment