பாரதியாக மாறிய ரோஜா அர்ஜூன் : பாரதி கண்ணம்மா சீசன் 2 ப்ரமோ வைரல்

பிரியங்கா நல்காரி ஜீ தமிழின் சீதா ராமன் சீரியலுக்கு சென்றுவிட்ட நிலையில், சிப்பு சூரியன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு வந்துவிட்டார்.

பாரதியாக மாறிய ரோஜா அர்ஜூன் : பாரதி கண்ணம்மா சீசன் 2 ப்ரமோ வைரல்

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர உள்ளதை தொடர்ந்து அடுத்து இந்த தொடரின் 2-வது சீனுக்காக ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் நாயகனாக ரோஜா சீரியல் நாயகன் சுப்பு சூரியன் இணைந்துள்ளார்.

விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதற்கு இந்த சீரியலின் பெயர்களும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். தமிழில் ஹிட்டான் படங்களின் பெயரை சீரியலுக்கு டைட்டிலாக வைத்து கதை நகர்த்தப்பட்டு அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரோஷ்னி ஹரிப்பிரியன், அருண் பிரசாத், ரூபாஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இந்த சீரியலில் இருந்து ஒரு கட்டத்தில் கண்ணம்மாவான நடித்து வந்த ரோஷ்னி விலகியதை தொடர்ந்து, நடிகை வினுஷா தேவி நாயகியாக கண்ணம்மா ரோலில் நடித்து வந்தார்.

தற்போது இந்த சீரியலில் உண்மை தெரிந்து பாரதியும் கண்ணம்மாவும் விவாகரத்து பெற்று மீண்டும் சேர்ந்து விட உள்ள நிலையில், நாளையுடன் (பிப்ரவரி 4) பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர உள்ளது. இதனிடையே வரும் திங்கள் முதல் (பிப்ரவரி 6) பாரதி கண்ணம்மா தொடரின் சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது.

இதில் கண்ணம்மாவாக வினுஷா தேவி தொடர்ந்து நடித்து வரும் நிலையில், பாரதியாக நடித்து வந்த அருண் பிரசாத் மாற்றப்பட்டு தற்போது சன்டிவி ரோஜா சீரியலின் நாயகன் சிப்பு சூரியன் பாரதியாக நடிக்கிறார். மேலும் முதல் சீசனில் இருந்து 2-வது சீசன் முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சன்டிவியின் ரோஜா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இதில் நடித்து வந்த நடிகை பிரியங்கா நல்காரி ஜீ தமிழின் சீதா ராமன் சீரியலுக்கு சென்றுவிட்ட நிலையில், சிப்பு சூரியன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.  

தமிழ் இந்தியன்  எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor sibbu suryan and vinusha devi bharathi kannamma season 2 promo viral

Exit mobile version