சாய்னா நேவால் மீதான அவதூறு வழக்கில் நடிகர் சித்தார்த்துக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்து சாய்னா ட்வீட் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ”தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூற முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை கலாய்க்கும் விதமாக நடிகர் சித்தார்த், சாய்னா ட்வீட்டை ரிட்வீட் செய்து, உலகின் பலவீனமான சேவல் சாம்பியன்.. இந்தியாவின் பாதுகாவலர்கள் எங்களிடம் உள்ளனர். ஷேம் ஆன் யூ என்று எழுதினார்.
சித்தார்த்தின் இந்த ட்வீட், சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் சாய்னாவை அவமதிக்கும் வகையில், ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா வலியுறுத்தி இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து சாய்னா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார். அப்போது ”சித்தார்த் என்ன சொன்னார் என்று எனக்கு புரியவில்லை. நான் அவரை ஒரு நடிகராக விரும்பினேன் ஆனால் இது நன்றாக இல்லை. அவர் சிறந்த வார்த்தைகளால் தன்னை வெளிப்படுத்த முடியும், அது ட்விட்டர், இதுபோன்ற வார்த்தைகள் மற்றும் கருத்துகளால் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள் என்று கூறினார்.
இந்த சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர் சித்தார்த், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து, சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரினார். சாய்னாவும், சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார்.
இப்படி இருக்க, சாய்னா நேவால் மீதான அவதூறு வழக்கில், நடிகர் சித்தார்த்துக்கு, சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக 2 புகார்கள் வந்துள்ளன. இதில் ஒன்று அவதூறு வழக்கு. சித்தார்த்த அறிக்கை மட்டுமே எங்களுக்குத் தேவை. தொற்றுநோய் காரணமாக, அறிக்கையை எவ்வாறு பெறுவது என்பது பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம். நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பியுள்ளோம்” என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “