Advertisment

நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்: சாய்னா நேவால் குறித்த சர்ச்சை ட்வீட்-க்கு முடிவுகட்டிய நடிகர் சித்தார்த்!

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை ட்வீட் செய்து, சர்ச்சையில் மாட்டிக் கொண்ட நடிகர் சித்தார்த் இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
sainanehwal

Actor Siddharth offered an apology to badminton player Saina Nehwal for controversial tweet

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு எதிராக பாலியல் ரீதியாக கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சித்தார்த், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.

Advertisment

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டு சித்தார்த் எழுதிய கடிதம்:

“அன்புள்ள சாய்னா, சில நாட்களுக்கு முன்பு உங்கள் ட்வீட்டுக்கு, பதிலடியாக நான் எழுதிய எனது முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். பல விஷயங்களில் நான் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட என் தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது. அதைவிட அதிக நயம் எனக்குள் இருப்பதை நான் அறிவேன். நகைச்சுவையைப் பொறுத்தவரை… ஒரு நகைச்சுவையை விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல நகைச்சுவை அல்ல. சரியாக புரிந்து கொள்ளப்படாத என்னுடைய நகைச்சுவைக்கு மன்னிக்கவும். ”

எவ்வாறாயினும், பல தரப்பினரும் கூறும்படி,  எனது வார்த்தை விளையாட்டிலும் நகைச்சுவையிலும் தீங்கிழைக்கும் நோக்கம் எதுவும் இல்லை.

நான் ஒரு உறுதியான பெண்ணியவாதி மற்றும் எனது ட்வீட்டில் பாலினம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக இல்லை என்றும் உறுதியளிக்கிறேன்.  நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள். நேர்மையுடன், சித்தார்த்.

இவ்வாறு அந்த கடிததத்தில் எழுதியுள்ளார்.

தற்போது நீக்கப்பட்ட அந்த ட்வீட்டில், சமீபத்தில் பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறலுக்கு சாய்னா கண்டனம் தெரிவித்தது குறித்து சித்தார்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இதைக் கண்டித்த தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவி ரேகா ஷர்மா, அவரது கணக்கை இடைநிறுத்துமாறு அழைப்பு விடுத்து, இந்த விஷயத்தை காவல்துறையிடம் எடுத்துச் செல்வதாகவும் கூறினார்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சாய்னா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார். அப்போது ”சித்தார்த் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவரை ஒரு நடிகராக விரும்பினேன் ஆனால் இது நன்றாக இல்லை. அவர் சிறந்த வார்த்தைகளால் தன்னை வெளிப்படுத்த முடியும், ஆனால் அது ட்விட்டர், இதுபோன்ற வார்த்தைகள் மற்றும் கருத்துகளால் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள் என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Saina Nehwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment